

திருவானைக்காவல் சன்னதி வீதியில் அமைந்துள்ள ஸ்ரீ மகா காளியம்மன் கோயில் மகா கும்பாபிஷேக விழா வியாழக்கிழமை காலை நடைபெற்றது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர் முன்னதாக கடந்த 3ஆம் தேதி காலை 10 மணிக்கு காவிரி நதியிலிருந்து மேளதாளம் முழங்க புனித நீர் கொண்டுவரப்பட்டது அதனைத் தொடர்ந்து கணபதி பூஜை உடன் யாகசாலை பூஜையின் முதல் கால பூஜை நடைபெற்றது இரண்டாம் நாளான நான்காம் தேதி காலை இரண்டாம் கால பூஜை மாலை மூன்றாம் கால யாக பூஜையும் நடைபெற்று முடிந்தது அதனைத் தொடர்ந்து இன்று காலை ஏழு முப்பது மணிக்கு தொடங்கி 10:30 மணி வரை நான்காம் கால யாக பூஜை நடந்தது பின்னர் யாகசாலையில் இருந்து மங்கள வாத்தியத்துடன் கடங்கல் புறப்பட்டு கோயில் கும்பத்திற்கு கொண்டுவரப்பட்டு புனித நீர் ஊற்றப்பட்டது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர் இந்த கோவில் கும்பாபிஷேகம் கடந்த 2006க்கு பிறகு 19 வருடங்களுக்குப் பிறகு நடைபெறுவது குறிப்பிடத்தக்கது மேலும் இந்த கோயிலில் சிற்பங்கள் கிடையாது சித்திர வடிவத்தில் காளியம்மன் ஓவியமாக வரையப்பட்டு இருக்கும் இத்திரு கோயில் திருவானைக்கா கோயிலுக்கு வாசலில் அமைந்துள்ளது மேலும் இது இக்கோயிலின் எல்லை காவல் தெய்வமான பிடாரி இரணியம்மன் கோவிலின் பதிவு கோயிலாகவும் விளங்கி வருகிறது இந்த ஊர் மக்கள் இக்கோயிலை தங்களை காக்கும் கடவுளாக பாவித்து வருகின்றனர்.
