திருப்பூர் ஐம்பெரும் விழாவில் அமைச்சர்கள்!


அரசு உயர்நிலைப் பள்ளியாக இருந்த 1969 காலகட்டத்திலேயே முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் திருக்கரங்களால் அடிக்கல் நாட்டப்பட்டு கட்டப்பட்ட வகுப்பறைகளுடன் இயங்கும் பெருமைக்குரியது திருப்பூர் மாவட்டம் அய்யன்காளிபாளையத்தில் இருக்கும் வி.கே,அரசு மேல்நிலைப்பள்ளி.
அப்பள்ளியில் புதிதாக கட்டப்பட்டுள்ள 12 வகுப்பறைகள் திறப்பு, நமக்கு நாமே திட்டம், மூலம் புதிய விளையாட்டுத் திடலுக்கு அடிக்கல் நாட்டுதல், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு. துரைசாமி பெயரில் கலையரங்கம் கட்ட அடிக்கல் நாட்டுதல், பள்ளி வளர்ச்சிக் குழு நன்கொடையாளர்கள் கவுரவிப்பு, பள்ளியின் 6௦ஆம் ஆண்டு நிறைவு ஆகியவற்றை உள்ளடக்கிய ஐம்பெரும் விழாவில் மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் எம்.பி. சாமிநாதன் கயல்விழி செல்வராஜ் ஆகியோருடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்..
உற்சாகத்தோடு திரண்டிருந்த மாணவர்களிடையே பள்ளியின் அனைத்து கட்டமைப்பையும் மேம்படுத்தவும், அவற்றை மாணவர்கள் முறையாக பயன்படுத்தவும் நம் முதலமைச்சர் அவர்கள் கொண்டு வந்துள்ள திட்டங்களை எடுத்துக்கூறி உரையாற்றினார்கள்.

செய்தியாளர் : பிரசன்னன் – தலைமை செய்தியாளர்

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    என் சி சி பி ஏ (NCCPA) சார்பாக மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டமானது திருச்சியில் நடைபெற்றது

    இன்று திருச்சிராப்பள்ளி தலைமை அஞ்சலகம் முன்பாக மத்திய அரசனை கண்டித்து நேஷனல் குவார்டினேஷன் கமிட்டி ஆப் பென்ஷன் அஸ் அசோசியேசன் ( NCCPA)மற்றும், (AIPRPA)ஏ ஐ பி ஆர் பி ஏ , (AIBDPA)ஏ ஐ பி டி பி ஏ,…

    வக்பு வாரிய சட்ட திருத்தத்திற்கு எதிராக எஸ்டிபிஐ கட்சியினர் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

    வக்பு வாரிய சட்டத்தை கண்டித்து இந்தியா முழுவதும் பல்வேறு இஸ்லாமிய அமைப்பினர் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக திருச்சி பாலக்கரை ரவுண்டானா பகுதியில் எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் மத்திய அரசு கண்டித்து வக்பு வாரிய சட்டத்தை திரும்ப…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *