
2026 என்ற இலக்கை நோக்கி, முதல் அடியை எடுத்து வைப்போம்.
வி.சாலை என்னும் வியூகச் சாலையில் சந்திப்போம் – தவெக தலைவர் விஜய் அறிக்கை.
மாநாடு நிகழப்போகும் தருணம். நம் மனம் மற்றும் கள வளாகத்திற்கு வெகு அருகில் வந்துவிட்டது.
உங்கள் ஒவ்வொருவரையும் நேரில் சந்திக்கப் போகும் கணங்கள். நம்மிடையே இருக்கும் அன்பின் கனத்தை இன்னும் பலமடங்கு கூட்டப் போகின்றன.
அதை வார்த்தைகளில் எப்படிச் சொல்வதென்று எனக்குத் தெரியவில்லை.
உங்கள் வருகைக்காக வி.சாலை எல்லையில், என் இரு கரங்களையும் விரித்தபடி, இதய வாசலைத் திறந்து வைத்துக் காத்திருப்பேன்; வாருங்கள், மாநாட்டில் கூடுவோம்.
2026 என்ற இலக்கை நோக்கி, முதல் அடியை எடுத்து வைப்போம். வி.சாலை என்னும் வியூகச் சாலையில் சந்திப்போம்; வெற்றி நிச்சயம்-தவெக முதல் மாநாடு அக்.27ம் தேதி நடைபெறவுள்ள நிலையில் தொண்டர்களுக்கு அக்கட்சித் தலைவர் விஜய் கடிதம்.