

புதுச்சேரி அரசு குடிமைப்பணி அதிகாரிகளுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிப்பது தொடர்பாக புதுதில்லி, கர்மயோகி பாரத் மற்றும் திறன் மேம்பாட்டு ஆணையத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யும் நிகழ்வு ஓட்டல் சன்வே மேனரில் இன்று (06-12-2024) நடைபெற்றது. மாண்புமிகு துணைநிலை ஆளுநர் திரு. K. கைலாஷ்நாதன் சிறப்பு விருந்தினராக நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். மாண்புமிகு முதலமைச்சர் திரு ந. ரங்கசாமி, மாண்புமிகு சட்டப்பேரவைத் தலைவர் திரு R. செல்வம், சட்டமன்ற உறுப்பினர் திரு அசோக் பாபு, தலைமைச் செயலர் திரு சரத் சௌகான், அரசு செயலர் திரு பங்கஜ் குமார் ஜா ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து பயிற்சி முகாம் நடைபெற்றது. அரசு உயரதிகாரிகள் பயிற்சியில் கலந்து கொண்டனர்.
