

மோடி அரசு தமிழக மக்களின், விவசாயிகளின் நலம் காக்கும் அரசு
மோடி அரசுக்கு எதிராக டங்ஸ்டன் விவகாரத்தில் திமுக – அண்ணா திமுகவின் புதிய திராவிட மாடல் கூட்டணியின் சட்டசபை அரசியல் நாடகம் எடுபடாது.
மத்திய அரசு மதுரை டங்ஸ்டன் சுரங்கத்திற்கு அனுமதி அளித்து, சுரங்கம் தோண்டப்பட்டால் முதல்வர் பதவியில் இருந்து விலகுவேன் என்று சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் பேசியது, ரத்து செய்யக் கூறும் தீர்மானம் நிறைவேற்றியது அப்பட்டமான அரசியல் நாடகம்.
மத்திய அரசின் சதியால் தமிழகத்தில் மதுரை அரிட்டாப்பட்டி, நாயக்கர் பட்டியில் “அத்தைக்கு மீசை முளைத்தால்” நான் முதல்வர் பதவியில் இருந்து விலகுவேன் என்பது போல் அண்ணன் ஸ்டாலின் அவர்களின் பேச்சு இருந்தது.
தமிழ்நாடும் தமிழக மக்களும் விரும்பும் திட்டங்களை தான் மத்திய மோடி அரசு தமிழகத்தில் செயல்படுத்தும். பிரதமர் மோடி ஆட்சியில் விவசாயிகள் நலனுக்காக திட்டங்கள் மட்டுமே செயல்படுத்தப்படுகிறது என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன். டங்ஸ்டன் சுரங்கம் அமையாது என்பதை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெளிவுபடுத்தி உள்ளார்.விரைவில் அதற்கான அறிவிப்பை மத்திய அரசு வெளியிடும். நல்ல செய்தி வரும் என்பதை தமிழக பாஜகவின் சட்டசபை தலைவர் நைனார் நாகேந்திரன் சட்டசபையில் தெரிவித்துள்ளார்.

“டங்ஸ்டன்” சுரங்க விவகாரத்தில் திமுக மற்றும் அண்ணா திமுக கட்சிகளின் புதிய திராவிட மாடல் கூட்டணி தமிழக மக்களை குழப்பும் விதமாக, இந்தத் திட்டத்தின் நோக்கத்தை திசை திருப்பும் விதமாக தவறாக அரசியல் செய்வது கண்டனத்துக்குரியது.
டங்ஸ்டன் சுரங்க விவகாரத்தில் திமுக அரசின் தவறான மற்றும் முழுமையற்ற தகவல்களால் மதுரை, அரிட்டாப்பட்டி நாயக்கர் பட்டி, கவுட்டயம்பட்டி எட்டி மங்கலம் உள்ளிட்ட கிராமப் பகுதிகளில் டங்சன் சுரங்கம் அமைக்க மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

பிரதமர் மோடி ஆட்சியில் விவசாயிகள் நலனுக்காக திட்டங்கள் மட்டுமே முன்னுரிமை கொடுத்து செயல்படுத்தப்படுகிறது மேலும் ஒரு மாநிலத்தின் வளர்ச்சிக்கு திட்டங்கள் தீட்டப்பட்டாலும், அப்பகுதியில் வாழும் மக்கள் மற்றும் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவிக்கும் பொழுது, அந்தந்த கிராம நல சபை, மாவட்ட நிர்வாகம், சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் கட்சிகள், மிக முக்கியமாக விவசாய நல சங்கங்கள் மற்றும் மாநிலங்களை ஆளுகின்ற அரசின் கருத்துக்களை கேட்டு மக்களின் நலனை கருத்தில் கொண்டு மட்டுமே மத்திய மோடி அரசு இறுதியாக அறிவிக்கப்பட்ட திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
இவற்றையெல்லாம் மறைத்து நேற்று சட்டமன்றத்தில் திமுக , அண்ணா திமுக புதிய திராவிட மாடல் கூட்டணி, வேண்டுமென்று மத்திய அரசு தன்னிச்சையாக ஏதேச்சதிகாரமாக டங்ஸ்டன் திட்டத்தை நிறைவேற்ற முடிவு எடுத்தது போல், தமிழக மக்களை, அப்பகுதி மண்ணின் மைந்தர்களை, விவசாய பெருமக்களை குழப்பம் வகையில் நாடகமாடுவது கண்டிக்கத்தக்கது.
மேலும் டங்ஸ்டன் டெண்டரை மத்திய அரசு கைவிடும் வரை விவசாயிகள் போராட்டம் தொடரும் என விவசாயத் தலைவர் என்ற போர்வையில் திமுக அரசின் பினாமி அரசியல் ஏஜென்ட் ஆக செயல்படும் பி ஆர் பாண்டியன் அறிவித்திருப்பது அரசியல் உள்நோக்கம் கொண்டது.
மதுரை மாவட்டம் அரித்தாப்பட்டியில் இந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்திற்கு டங்ஸ்டன் சுரங்க உரிமம் வழங்க கடந்த பிப்ரவரி மாதம் நடைமுறை துவங்கியது. மேலும் மிக அரிதாக கிடைக்கக்கூடிய, ஒரு நாட்டின் வளர்ச்சிக்கும் வலிமைக்கும் பாதுகாப்புக்கும் முக்கிய கனிம வளங்களாக கருதக்கூடிய பிளாட்டினம் டங்ஸ்டன் உள்ளிட்ட 20 கனிமங்களை எடுக்க மாநில அரசின் அனுமதி தேவையில்லை என லோக்சபாவில் மத்திய அரசு கண்ட ஆண்டு தீர்மானத்தை நிறைவேற்றியது.
அப்பொழுது தமிழகத்தைச் சேர்ந்த திமுக மற்றும் அதன் கூட்டணியில் உள்ள 38 எம்பிக்கள் அமைதியாக இருந்தனர். தமிழக மக்கள் நலன் குறித்து உண்மையில் திமுகவினருக்கு அக்கறை இருந்திருந்தால் டங்க்சன் விவகாரத்தில் அன்றே கருத்துக்களை தெரிவித்து இருக்கலாம். ஆனால் வாய் மூடி மௌனமாக இருந்து விட்டனர்.அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் திரு தம்பிதுரை அவர்கள் மட்டும் மாநிலங்களவையில் நடந்த விவாதத்தில் இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக கருத்துக்களை பேசியிருந்தார்.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் திமுக அங்கம் வகித்தபோது,
தமிழகம் வஞ்சிக்கப்பட்டு எந்த விதமான மக்கள் நல திட்டங்களும் நிறைவேற்றப்படவில்லை. டெல்டா மாவட்ட மீத்தேன் வாயு திட்டம் முதல் பாரம்பரிய மிக்க ஜல்லிக்கட்டு தடை வரை எண்ணிலடங்காத விஷயங்களில் தமிழகத்திற்கு எதிரான நிலைப்பாட்டில் செயல்பட்டதற்கு தமிழக மக்களுக்கு செய்த துரோகத்திற்கு நாடாளுமன்ற ஆவணங்களை சாட்சி என்பதையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மறந்துவிடக்கூடாது.
நேற்றைய சட்டசபை விவாதத்தில் அமைச்சர் துரைமுருகன் நில உரிமைகள் மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ளதால் இந்த சட்டம் மாநில அரசின் உரிமைகளை பறிப்பது போல் ஆகிறது சுரங்க அனுமதி வழங்கும் அதிகாரத்தை மாநில அரசுக்கு வழங்க வேண்டும் என்று கனிம வளங்கள் மாநில பட்டியலில் இல்லை என்று மத்திய அரசு குறித்து நேற்று சட்டசபையில் கடுமையாக பேசியிருந்தார்.
அமைச்சர் துரைமுருகனின் ஆதங்கம், தமிழக நலனுக்கும் தமிழகத்தின் வளர்ச்சிக்கும் ஆனது இல்லை. திமுக கட்சியினரின் ஆதரவோடு தமிழகத்தில் நடக்கும் மணல் கொள்ளையில், கனிம வள முறைகேட்டில் பல்லாயிரம் கோடி ரூபாய் ஊழல் பணம் திமுக அரசுக்கு கிடைப்பதை மேலும் பல லட்சம் கோடிகளாக மாற்ற முடியவில்லையே என்ற ஆதங்கத்துடன் பேசியுள்ளார்.
காங்கிரஸ் கூட்டணி அரசில் திமுக அங்கம் வகித்தபோது கனிம வளங்களை ஏலம் விடாமல் தனியார் நிறுவனங்களுக்கு தாரை பார்த்து பல லட்சம் கோடி கொள்ளை அடிக்க பட்டது. 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஊழலுக்கு வித்திட்டது போல் ஐக்கிய முற்போக்கு காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் கனிம சுரங்க உரிமைகளை அவர்களுக்கு வேண்டியவர்களுக்கே வழங்கினர்.
நேற்று ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் நடந்த உலகம் முதலீட்டாளர் மாநாட்டில் சீர்திருத்தம்,செயல்பாடு மற்றும் மாற்றம் ஆகிய தாரக மந்திரத்துடன் நம் நாட்டில் ஏற்பட்ட முன்னேற்றம் அனைத்து துறைகளிலும் பிரதிபலிக்கிறது என்று பிரதமர் பெருமையுடன் குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் மோடி அவர்களின் தொலைநோக்கு சிந்தனைகளை உணர்ந்து, மக்கள் நல அரசியலைப் புரிந்து அவருடன் இணைந்து தமிழகத்தின் வளர்ச்சிக்காக பாடுபட வேண்டும். தேர்தல் அரசியலுக்காக மோடி அரசு குறித்து தமிழக மக்களிடையே தவறான கருத்துகளை உருவாக்கக்கூடாது.
2014 ஆம் ஆண்டு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அரசு பதவி ஏற்ற பிறகு, கனிமவளத் துறையில் நடக்கும் ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் கனிமவள உரிமங்கள், ஏலங்கள் வாயிலாகவே வழங்கப்படும் இன்று சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டு உடனடியாக நிறைவேற்றப்பட்டது என்பதை தமிழக முதல்வரும், திமுக கூட்டணி கட்சியினரும் என்பதை மறக்க முடியாது மறைக்க முடியாது. மறுக்க முடியாது.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் காங்கிரஸ் ஆட்சியில் திமுக அங்கம் வகித்தபோது, தமிழகம் வஞ்சிக்கப்பட்டு எந்த விதமான மக்கள் நல திட்டங்களும் நிறைவேற்றப்படவில்லை. டெல்டா மாவட்ட மீத்தேன் வாயு திட்டம் முதல் பாரம்பரிய மிக்க ஜல்லிக்கட்டு தடை வரை எண்ணிலடங்காத விஷயங்களில் தமிழகத்திற்கு எதிரான நிலைப்பாட்டில் செயல்பட்டதற்கு தமிழக மக்களுக்கு செய்த துரோகத்திற்கு நாடாளுமன்ற ஆவணங்கள் தான் சாட்சி என்பதை முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களும் மறந்துவிடக்கூடாது.
பிரதமர் நரேந்திர மோடி
ஆண்ட கட்சிகளையும் தற்போது ஆளுகின்ற கட்சிகளையும் விட தமிழக மக்களின் மேல் அக்கறை கொண்டவர் நாட்டின் வளர்ச்சிக்காக கனிம வளம், அனு விஞ்ஞானம், தொழில்துறை உள்ளிட்ட பிற துறைகளின் சார்பாக மத்திய அரசு திட்டம் தீட்டினாலும் விவசாய மக்களின் வேண்டுகோள்கள் கனிவுடன் பரிசீலிக்கப்பட்டு, அவர்களுடைய நலன்களை பேணி பாதுகாக்கும் வகையில் உடனடியாக அவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன
கடந்த ஆண்டு தமிழகத்தின் காவிரி டெல்டா பகுதிகளில், குறிப்பாக, சேத்தியாதோப்பு, மைக்கேல்பட்டி மற்றும் வடசேரி பகுதிகளில், நிலக்கரி சுரங்கங்கள் அமைப்பதற்கான ஏல அறிவிப்பை, மத்திய அரசு வெளியிட்டிருந்தது.டெல்டா மாவட்டங்களின் விவசாய சங்க பிரதிநிதிகள், பாரத பிரதமருக்கு இந்த சுரங்க ஏல அனுமதியை கைவிட வேண்டும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வாயிலாக கோரிக்கை விடுத்தனர். தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை உடனடியாக பிரதமருக்கு இது குறித்து கடிதம் எழுதினார். பெங்களூரு சென்று, மத்திய சுரங்கத் துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷியை சந்தித்து இத்திட்டத்தை கைவிடும்படி வலியுறுத்தினார்.மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி, கூட்டாட்சி தத்துவத்தின் மாண்புக்கு மதிப்பு அளிக்கும் வகையிலும், தமிழக மக்களின் உணர்வுகளையும் நலன்களையும் கவனத்தில் கொண்டு, இந்த மூன்று சுரங்கங்களையும், ஏல நடவடிக்கைகளில் இருந்து விலக்கு அளிக்கும்படி உத்தரவிட்டுள்ளேன் என்று உடனடியாக அறிவித்தார்.
மேலும் தென்காசி மாவட்ட ம் திருவேங்கடம் தாலுகா, குறிஞ்சாங்குளம் கிராமத்தில் கிராபைட் உள்ளிட்ட தாது மணல் வெட்டி எடுக்க ரூ45,000 கோடி திட்டத்துக்கு மத்திய அரசு திட்டமிட்டிருந்தது. இதற்காக மின் ஏலமும் விட முடிவு செய்யப்பட்டது. ஆனால் அப்பகுதி மக்கள் பாரத பிரதமருக்கு இந்த திட்டம் இங்கு நடைமுறைப்படுத்தக் கூடாது என்று கோரிக்கை விடுத்தனர். அப்பகுதியை சேர்ந்த பல்வேறு சமூக நல அமைப்புகள் உட்பட, திமுக உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்து கட்சிகளும் மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்திருந்தன.
தமிழக பாஜக குறிஞ்சான் குளம் கிராம மக்களின் எண்ணங்களை மத்திய அரசுக்கு உரிய முறையில் தெரிவித்து, அவர்களின் நலம் காக்கும் வகையில் தகுந்த முன்னெடுப்பை எடுத்ததன் காரணமாக அந்த திட்டம் உடனடியாக கைவிடப்படுவதாக மத்திய மோடி அரசு அறிவித்தது. இதையெல்லாம் வசதியாக மறந்து மறைத்து சட்டசபையில் புதிதாக உருவான திமுக அண்ணா திமுக திராவிட மாடல் கூட்டணி மத்திய அரசு தவறு செய்தது போல் நாடகம் ஆடுவதை மக்கள் நம்ப மாட்டார்கள்.
தமிழகத்திலிருந்து ஒரு சாதாரண குடிமகன் தமிழக நலன் பாதிக்கப்பட்டதாக உணர்ந்தால், பாரதப் பிரதமருக்கு மின்னஞ்சலில், உரிய முறையில் வேண்டுகோளை வைத்தாலே, அது நியாயமாக இருந்தால் உடனடியாக பரிசீலிக்கப்பட்டு தமிழக மக்களின் நலன் காக்கும் அக்கறை உள்ள அரசாக மத்திய அரசும் செயல்பட்டு வருகிறது. எனவே தமிழக மக்களின் தமிழக விவசாயிகள் வேண்டுகோளை பிரதமர் மோடி தாயுள்ளத்துடன் நிறைவேற்றுவார். எனவே டங்ஸ்டன் சுரங்கம் அமையாது என்பதை திட்டவட்டத்துடன் தமிழக பாஜக தெரிவித்துக் கொள்கிறது.
எனவே பாரத பிரதமர் நரேந்திர மோடி அரசு தமிழகத்திற்கு ஆற்றி வரும் நல்ல திட்டங்களை தமிழகத்தின் கட்டமைப்பை மேம்படுத்த வளர்ச்சிக்கான திட்டங்களை உருவாக்க அளித்துள்ள லட்சக்கணக்கான கோடி நிதியை, அக்கறையான செயல்பாடுகளை எல்லாம் இருட்டடிப்பு செய்யும் வகையில், மக்களிடையே பாஜக கட்சி மற்றும் ஆட்சி குறித்து அவதூறு பிரசாரம் செய்யும் திமுகவினரை வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் தமிழக மக்கள் தோற்கடிப்பார்கள்.
ஏ.என்.எஸ்.பிரசாத்
தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர்
கைபேசி : 9840170721