
திருச்சிராப்பள்ளி மாவட்டம் உறையூர் நடு வைக்கோல் கார தெருவில் கடந்த 20 ஆண்டுகளாக பூட்டப்பட்டு கிடக்கும் தனியாரின் இடத்தில் முட்புதர்களும் மரங்களும் செடிகளும் வளர்ந்து அடுத்தடுத்த வீடுகளில் அதன் வேர்கள் பரவிய காரணத்தினால் அந்த வீடுகளின் சுவர்களில் விரிசல்களும் பாதிப்பும் ஏற்பட்டு அந்த வீடுகளில் குடியிருக்கும் வீட்டின் உரிமையாளர்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டு வருகின்றார்கள்.

இதுவரை அவர்களே அந்த புதர்களை அகற்றுவதற்காக கிட்டத்தட்ட 2 லட்சம் ரூபாய்க்கு மேல் செலவு செய்து அந்த முற்படர்களையும் மரங்களையும் செடிகொடிகளையும் அப்புறப்படுத்திய பிறகும் அவை வளர்ந்து விருட்ச்சமாக நிற்பதால் என்ன செய்வது என்று தெரியாமல் பரிதவித்து நிற்கின்றார்கள்.

மேலும் அதிக அளவில் புதர் மண்டியிருக்கும் காரணத்தினாலும் சமீபமாக தொடர் மழை பொழிந்து வருவதாலும் பூட்டி இருக்கும் வீடுகளில் இருக்கும் புதர்களில் இருந்து பாம்புகளும் விஷ ஜந்துக்களும் படையெடுத்து வந்து வீடுகளில் நுழைவதனால் மிகப்பெரிய அச்சுதலுக்கு உள்ளாகி வருகின்றார்கள்.

பலமுறை மாநகராட்சி நிர்வாகத்திடம் இது தொடர்பாக புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கைகளும் எடுக்கப்படாத காரணத்தினால் அந்த வீடுகளில் வாழும் மக்கள் மிகவும் அவதிக்கு உள்ளாகி வருகின்றார்கள்.

சிறுக சிறுக பணம் சேர்த்து சொந்தமாக ஒரு இடம் வாங்கி வீடு கட்டி குடியேறினால் அருகிலேயே இருக்கும் பராமரிக்கப்படாத வீடுகளினால் ஏற்படும் இதைப் போன்ற கடுமையான சவால்களை எப்படி எதிர்கொள்வது என்று தெரியாமல் அந்த நடுத்தர வர்க்க மக்கள் மிகவும் கலங்கிப் போய் நிற்கின்றார்கள்.

மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக இந்த பிரச்சனையில் தலையிட்டு அந்த பூட்டப்பட்ட இடத்தில் சொந்தக்காரர் மீது தகுந்த நடவடிக்கை எடுப்பதோடு மட்டுமல்லாமல் பரவி இருக்கும் அந்த முற்பகர்களையும் செடி கொடிகளையும் வெட்டி அப்புறப்படுத்தி அந்த பகுதியில் வாழும் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.
