
திருச்சிராப்பள்ளி மாவட்டம் திருப்பராய்த்துறை சிவன் கோவில் பாடல் பெற்ற ஸ்தலம்.

இந்த திருக்கோவிலில் சிவனடியார்கள் பொதுமக்கள் பக்தர்கள் ஒவ்வொரு வருடமும் மார்கழி மாத பிறப்பின் பொழுது தினமும் அதிகாலையில் சிவனைத் தொழுது தேவார திருவாசக பதிகங்களையும் திருப்பள்ளி எழுச்சி பாடலையும் பாடி மனம் உருகி பிரார்த்தனை செய்வது வழக்கம்.

அதன் தொடர்ச்சியாக சிவனடியார்களையும் குழந்தைகளையும் மரியாதை செய்யும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் சிவனடியார்களுக்கும் குழந்தைகளுக்கும் பரிசுப் பொருட்கள் வழங்கி அவர்களை உற்சாகப்படுத்துவது அந்த கிராமத்து மக்களின் இயல்பு.

இது கடந்த 40 வருடங்களாக தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. ஆனால் இப்பொழுது திருப்பராய்த்துறை சிவன் கோவிலின் செயல் அலுவலராக பணியில் இருக்கும் திருமதி ரோகிணி என்கின்ற அதிகாரி இந்த செயல்முறையை கோவில் வளாகத்தில் உள்ளே நந்தியின் முன்பு செய்யக்கூடாது என திடீரென உத்தரவு பிறப்பித்த காரணத்தினால் இன்று அதிகாலை மார்கழி மாத பிறப்பின் பொழுது கோவிலுக்கு தரிசனம் செய்த வந்த சிவனடியார்களும் குழந்தைகளும் வீதியில் நிற்கவைக்கப்பட்ட கொடுமை அரங்கேறியது.

் கோவிலுக்குள் வந்து பதிகம் பாடக்கூடாது எனவும் அவர்களுக்கு பரிசு பொருட்கள் கொடுக்கக்கூடாது எனவும் செயல் அலுவலர் நிர்பந்தித்த காரணத்தினால் கொட்டும் பனியில் குழந்தைகளும் வயதானவர்களும் சிவனடியார்களும் வீதியில் நிற்கவைக்கப்பட்டனர். அவர்களுக்கு தெருவில் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது.
எல்லோருக்குமான ஆட்சி தருவதாக உத்தரவாதம் அளித்து அதை செயல்முறைப்படுத்தும் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் விதமாக செயல்படும் இவரை போன்ற அதிகாரிகளால் தான் தமிழ்நாடு அரசின் மீது மக்களுக்கு ஒரு விதமான வெறுப்பு ஏற்படும் சூழல் உருவாகின்றது. இந்த பிரச்சனைக்கு காரணமான செயல் அதிகாரி மீது இந்து அறநிலையத்துறை அதிகாரிகளும் அமைச்சர் சேகர் பாபு அவர்களும் உடனடியாக தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.
குறிப்பு :
இந்த செயல் அதிகாரிக்கும் திருப்பராய்த்துறை கிராமத்தை சேர்ந்த நந்தவனம் மக்களுக்கும் இடையில் நீண்ட நாட்களாகவே கருத்து வேறுபாடு உள்ளது. அந்த கிராம மக்களுக்கு கிடைக்க வேண்டிய மின்சாரம் குடிநீர் ஆகியவற்றை இந்த செயல் அதிகாரி தான் வழங்கப்பட விடாமல் தடுத்து வருவதாகவும் குற்றச்சாட்டு இருந்து வருகின்றது. ஆகவே இந்து அறநிலையத்துறை அதிகாரிகளும் இந்து அறநிலைத்துறை அமைச்சர் அவர்களும் உடனடியாக இந்த பிரச்சினையில் தலையிட்டு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே நமது கோரிக்கையாகவும் உள்ளது.