

திருச்சி டிச19
திராவிட மாடல் ஆட்சி நடத்தக்கூடிய முதல்வர் அவர்களின் கரத்தை மக்களாகிய நீங்கள் வலுப்படுத்த வேண்டும் உங்களுடைய ஆதரவின் மூலம் அவர் உங்களுக்காக கொண்டுவரும் திட்டம் முழுமையாக உங்களை வந்துசேர்கிறது இதனால் முழு நம்பிக்கையும் பெற்று நிம்மதியாக வாழ்கிறீர்கள்
இதற்கு ஒரே காரணம் யார் என்றால் அது தமிழக முதல்வர் தான் என்றும்
மேலும் எதிர் கட்சியை சார்ந்தவர்கள் பேசும்போது எல்லாம் நாங்கள் இரண்டரை கோடி உறுப்பினர்களை கொண்டுள்ள இயக்கம் என்று கூறுகிறார்கள் அது அவர்கள் இயக்கம் கூறுவதில் தவறு ஏதுமில்லை ஆனால் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் அவர்கள் ஒட்டுமொத்தமாக வாங்கிய வாக்குகள் 89 லட்சம் வாக்குகள் மட்டும்தான்
அப்படியானால் ஒரு கோடி 60 லட்சம் பேர் எங்கு சென்றார்கள் என்றால் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு ஆதரவளித்து தமிழக முதல்வரின் கரத்தை வலுப்படுத்தி உள்ளனர் என்றும்
மேலும் 2021ல் தேர்தலில் தோல்வி அடைந்தவர்கள் கூறும் பொழுது நமக்கும் திராவிட முன்னேற்றக் கழக கூட்டணிக்கும் பெரியதாக வாக்கு வித்தியாசம் இல்லை என்றும் வெறும் ஒரு லட்சத்து 98 ஆயிரம் வாக்குகள் தான் என்றும் கூறுகின்றனர்.
ஆனால் உண்மை நிலை என்னவென்றால் திமுக கூட்டணி பெற்றது ஒரு கோடியே 74 லட்சம் வாக்குகள் ஆனால் எதிர்க்கட்சிகள் பெற்ற வாக்குகள் ஒரு கோடியே 53 லட்சம் வாக்குகள் ஏறக்குறைய 20 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் நாம் வெற்றி பெற்றுள்ளோம் என்றும் இந்த முறை 34 இடங்களில் நின்று வெறும் 21 சதவீத வாக்குகள் தான் பெற்றிருக்கிறார்கள் என்றும் அவர்கள் வளர்கிறார்களோ தேய்கிறார்களோ என்பதை நமக்கு தேவையில்லை ஆனால் ஒட்டுமொத்தமாக அவர்களுடைய வாக்குகளும் திமுகவிற்கு தான் வாக்களிக்கப்பட்டதாகவும் எடுத்துரைத்தார் மேலும் தமிழக முதல்வரின் அன்றாட பணியில் 50% பணியை தனது தொழில் சுமந்து கொண்டு பணியாற்றுபவர் தான் இன்று பிறந்தநாள் விழாகானும் துணை முதல்வர் என்றும் எடுத்துரைத்தார் மேலும் சிறுபான்மையினருக்காக தோளோடு தோல் நின்று உழைக்கக்கூடிய இயக்கம் தான் திராவிட முன்னேற்றக் கழகம் என்றும் சிறுபான்மையினர் மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழக மக்களுக்காக உழைக்கக் கூடியவர் தான் மாண்புமிகு முதல்வர் என்றும் எடுத்துரைத்தார்.