
திருச்சி தெற்கு மாவட்ட திமுக வின் சார்பாக கழக இளைஞரணி செயலாளர் துணை முதல்வர் அவர்களின் பிறந்தநாளை 47 அவரது அகவையை குறிக்கும் வகையில் நடைபெறும் நிகழ்வுகளின் வரிசையில் மலைக்கோட்டை பகுதி கழகம் சார்பாக. நடைபெறும் மாபெரும் பொதுக்கூட்டம்.
திருச்சி டிச 18
தமிழக துணை முதல்வரும் திராவிட முன்னேற்றக் கழக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் அவர்களின் 47 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மலைக்கோட்டை பகுதி கழகத்தின் சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்திற்கு மலைக்கோட்டை பகுதி கழகச் செயலாளர் மோகன் தலைமை தாங்கினார்.
பொதுக்கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளர்களாக சிறப்புரை ஆற்றிய திருச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர் தமிழக பள்ளிகல்வி துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி,
மாநகர செயலாளர் மு.மதிவாணன், கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ்,
மற்றும் தலைமை கழகச் செய்தி தொடர்பாளர் தமிழன் பிரசன்னா ஆகியோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் வண்ணை அரங்கநாதன், செங்குட்டுவன், லீலாவேலு, துனைமேயர் திவ்யா, வட்டகழகச் செயலாளர்கள் சிவக்குமார், ஜெயச்சந்திரன், மாவட்ட பிரதிநிதிகள் மோகன், ராஜேஸ், மாமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம், மாவட்ட மாநகர பகுதி கழக நிர்வாகிகள் அணிகளின் அமைப்பாளர்கள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
