வன்கொடுமை தாக்குதலால் பாதிக்கப்பட்ட வர் மருத்துவமனையில் அனுமதி

பிரபு
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் செய்தியாளர்
செல்:9715328420

மூலனூர் அருகே அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை மர்ம உறுப்பில் தாக்கிய உயர் ஜாதிக்காரரை கைது செய்யக்கோரி பாதிக்கப்பட்டவர் தாராபுரம் அரசு மருத்துவமனையில் பேட்டி:-

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்துள்ள தூரம்பாடி ஊராட்சி, நத்தப்பாளையம், தெற்கு காலனியில் வசித்து வருபவர் கருப்புசாமி,(வயது 35) இவரது மனைவி நதியா (வயது 30) இந்த தம்பதியினருக்கு ஹாசினி என்ற ஒரு வயது குழந்தை உள்ளது.

இவர் நத்தப்பாளையம் ஊராட்சி பகுதிகளுக்கு உட்பட்ட கிராமங்களில் குடி தண்ணீர் திறந்து விடும் வேலை செய்து வருகிறார்.

மேலும் ஒப்பந்த அடிப்படையில் உடைந்த பைப்புகளை ஒட்டுவது குழி தோண்டுவது போன்ற பணிகளையும் செய்து வருகிறார்.

இவர் தாழ்த்தப்பட்ட அருந்ததிய சமூகத்தைச் சேர்ந்தவர் கருப்புசாமி இவர் நேற்று முன்தினம் நத்தபாளையத்தில் உள்ள தனியார் பேக்கரி ஒன்றில் மேஜையில் அமர்ந்து டீ”குடித்துக் கொண்டிருந்தார் அப்போது.

அதே பகுதியைச் சேர்ந்த உயர் ஜாதி காரரான. சென்னியப்பன் அதே தனியார் பேக்கரியில் டீ’ குடிக்க வந்தார். அப்போது அருந்ததியர் சமுதாயத்தைச் சேர்ந்த கருப்புசாமி மேஜையில் அமர்ந்து டீ’குடிப்பதை பார்த்து முறைத்து விட்டு சென்றுள்ளார்.

அதன் பிறகு நேற்று காலை கருப்புசாமி நத்தபாளையத்தில் உள்ள தனது அக்காள் வீட்டிற்கு செல்வதற்காக சென்று கொண்டிருந்தார் அப்போது கருப்பு சாமியை வழிமறைத்த சென்னியப்பன் டேய் என தாழ்த்தப்பட்ட வகுப்பின் பெயரைக் கூறி கருப்பு சாமியை அழைத்துள்ளார்.

அப்போது நான் அருந்தும் டீக்கடையில் நீ’ என் முன் அமர்ந்து டீ’ குடிக்கிறாய் கவுண்டருக்கு என்ன மரியாதை நீ’ கொடுக்கிறாய் என கன்னத்தில் அடித்தும் அதன் பிறகு கருப்பு சாமியின் மர்ம உறுப்பில் எட்டி உதைத்தும் நான் இனிமேல் வரும் பொழுது நீ எழுந்து நிற்க வேண்டும் என கருப்பு சாமியின் சமூக பேரைச் சொல்லி திட்டி-மிரட்டி சென்றுள்ளார்.

அடி வாங்கிய கருப்புசாமி உயிருக்கு ஆபத்தான நிலையில் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் 108,ஆம்புலன்ஸ் மூலம் தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர்.

அதன் பிறகு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சையில் கருப்பு சாமியின் மர்ம உறுப்பில் சென்னியப்பன் அடித்ததால் அவருக்கு ரத்தம் வந்ததாகவும் மேலும் கிட்னி செயலிழக்க வாய்ப்புள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனை அடுத்து இன்று கருப்புசாமி தாராபுரம் அரசு மருத்துவமனையில் ஆண்கள் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து மூலனூர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். ஆனால் சென்னியப்பன் இடம் பெருந்தொகை பெற்றுக் கொண்டு அவரை கைது செய்யாமல் விசாரித்துக் கொள்ளலாம் போங்கள் என அனுப்பி விட்டதாகவும் கருப்புசாமி தெரிவிக்கின்றார்.

மேலும் கருப்பு சாமியை தாக்கிய சென்னியப்பன் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சென்னியப்பனை கைது செய்ய வேண்டும் என கருப்புசாமி கண்ணீர் மல்க காவல்துறைக்கு வேதனையுடன் கோரிக்கை வைத்துள்ளார்.

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    என் சி சி பி ஏ (NCCPA) சார்பாக மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டமானது திருச்சியில் நடைபெற்றது

    இன்று திருச்சிராப்பள்ளி தலைமை அஞ்சலகம் முன்பாக மத்திய அரசனை கண்டித்து நேஷனல் குவார்டினேஷன் கமிட்டி ஆப் பென்ஷன் அஸ் அசோசியேசன் ( NCCPA)மற்றும், (AIPRPA)ஏ ஐ பி ஆர் பி ஏ , (AIBDPA)ஏ ஐ பி டி பி ஏ,…

    வக்பு வாரிய சட்ட திருத்தத்திற்கு எதிராக எஸ்டிபிஐ கட்சியினர் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

    வக்பு வாரிய சட்டத்தை கண்டித்து இந்தியா முழுவதும் பல்வேறு இஸ்லாமிய அமைப்பினர் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக திருச்சி பாலக்கரை ரவுண்டானா பகுதியில் எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் மத்திய அரசு கண்டித்து வக்பு வாரிய சட்டத்தை திரும்ப…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *