
காணும் மிகவும் ஆபத்தான பாலத்தை கடந்து தான் திருப்பராய்த்துறையில் காவிரி ஆற்றுக்கு செல்ல வேண்டும்.
நீங்க பார்க்கிற இந்த பாலம் திருப்பராய்த்துறையில் இருக்கு இந்த பாலத்தில் சைடுல தடுப்பு சுவர் கிடையாது. ஏன்னு தெரியல யாருக்கும் தெரியல இது யாரு கண்ணுக்கும் தெரியல, யாருமே சரி பண்ண மாட்டேங்கறாங்க. BDO கிட்ட கேட்டா அது எங்களுக்கு சம்பந்தம் இல்லை என்கிறார்கள். யாராவது முடிஞ்சவங்க சரி பண்ணி கொடுத்தீர்கள் என்றால் நன்றாக இருக்கும்
இந்த பாலத்தில் கைப்பிடி சுவர்கள் இல்லை. அவைகள் உடைந்து கிட்டத்தட்ட அஞ்சு ஆறு வருடங்கள் ஆகிவிட்டது. தினமும் அந்த இடத்தில் காவிரி ஆற்றிற்கு குளிக்க செல்லும் மக்களுக்கும் பாதுகாப்பாற்றதாகும்.
இந்த பாடத்தின் அடியில் கம்பிகள் உடைந்து எப்பொழுது வேண்டுமானாலும் விழுந்து விடும் நிலையில் உள்ளது. அந்தப் பாலம் எந்த ஒரு பராமரிப்பும் இன்றி உள்ளது, பாலத்தின் கட்டிடத்தை ஊடுருவி மரங்கள் வளர்ந்துள்ளன மற்றும் பாலத்தை தாங்கும் தூண்களும் பாதிப்படைந்துள்ளன. பல இடங்களில் கட்டிடத்தின் கான்கிரீட்டில் உள்ளே உள்ள கம்பிகள் தெரிகின்றன அந்த கம்பிகள் எல்லாம் துருப்பிடித்து உள்ளன. இந்த பாலம் எப்பொழுது வேண்டுமானாலும் இடிந்து விடலாம்.
இந்தப் பாலத்தை கடந்து மக்கள் காவிரி ஆற்றுக்கு செல்கின்றனர் இது ஒரு திருமஞ்சன துறையாகும் இந்தத் துறையில் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து குளித்து செல்கின்றனர்.
ஒருவேளை தங்களால் இந்த பாலத்தை சரி செய்ய காலதாமதம் ஆகும் என்றால் தயவு செய்து தற்காலிக நடவடிக்கையாக இந்தப் பாலத்தில் இருபுறமும் குச்சி அல்லது கம்பிகளை கொண்டு பாதுகாப்பு அரன்களை ஏற்படுத்தி தரவும்
பத்து நாட்களுக்கு முன்னால் இந்த இடத்தில் ஒருவர் இருசக்கர வாகனத்துடன் இந்த ஆற்றில் விழுந்துவிட்டார், நாம் காலதாமதம் செய்யும் ஒவ்வொரு நிமிடமும் இது மக்களுக்கு ஆபத்தை கூட்டிக்கொண்டே செல்லும் என்பதை தங்களது மேலான கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறோம்
தயவு செய்து இது தங்களின் மேலான கவனத்திற்கு உரிய நடவடிக்கைக்கும் பணிவுடன் சமர்ப்பிக்கப்படுகிறது.
இதுல ரொம்ப வருத்தமான விஷயம் என்னன்னா வருஷா வருஷம் இங்க திருச்சி மாவட்டத்திலேயே மிகவும் பிரசித்தி பெற்ற சிவனடியார்களுக்கு மிக முக்கியமான முதல் முழுக்கு ஐப்பசி 1ஆம் தேதி நடக்குது அதுல கிட்டத்தட்ட ஒரு 5000 பேராவது கலந்து கொள்கிறார்கள் அதுக்கப்புறம் கூட யாருமே கண்டுக்கல உள்ளாட்சி பிரதிநிதிகள் ஊராட்சி பிரதிநிதிகள் என்ன பண்றாங்கன்னு தெரியல
Regards,
Warrant Officer K Thangaraj (Retd)
Indian Air Force