

நாடக இயக்குனராக களம் இறங்கும் bj நவீன்..
பத்திரிக்கைதுறையில் நிருபராக பணியாற்றி வந்த இவர் “பரமன் “என்ற படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார், தற்போது மேடை நாடகம் ஸ்கிரிப்ட் எழுதி இயக்க உள்ளதாக கூறியுள்ளார். பள்ளி பருவத்தில் அதிகமாக மேடை நாடங்களில் நடித்துள்ளார், தற்போதும் வாய்ப்பு கிடைக்கும் போது நடித்து வருகிறார் சொந்தமாக நாடகம் ஸ்கிரிப்ட் எழுதி இயக்க வேண்டும் என்ற ஆர்வம் படிக்கும் போதே மனதில் எழுந்தது தற்போது அதற்கான நேரம் வந்துள்ளது என தெரிவித்ததுடன் “நேர்கானல் “என்னும் டைட்டில் வைத்து ஸ்கிரிப்ட் எழுத துவங்கியுள்ளதாக கூறியுள்ளார், ஆவணம், சமூகம் சார்ந்த நிகழ்வுகளை வைத்து இயக்க உள்ளார். தொடர்ந்து சினிமாவிலும் நடிக்க கவனம் செலுத்தி வரும் இவர் புதிய படத்தில் நடிக்க வாய்ப்பு உள்ளதால் காத்திருக்கிறேன் என கூறியுள்ளார்.. தெரு நாடகங்கள், மேடை நாடங்களுக்கான ஸ்கிரிப்ட் எழுதுவது, இயக்குவது என பயணம் தொடரும் எனவும் கூறியுள்ளார்..

நியூ திருச்சி டைம்ஸ் தன் நெஞ்சார்ந்த வாழ்த்துகள் தெரிவித்துக்கொள்கிறது.