

இன்று திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் கூட்ட அரங்கில் திருச்சிராப்பள்ளி மாவட்ட உணவு பாதுகாப்பு பிரிவு வழிகாட்டுதல் குழு சிறப்புக் கூட்டம் ஆட்சித்தலைவர் பிரதீப்குமார் IAS அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
மாவட்ட உணவுபாதுகாப்பு நியமன அலுவலர் ரமேஷ் பாபு முன்னிலை வகித்தார். துறைவாரியான அதிகாரிகள் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நுகர்வோர் அமைப்பு சார்பாக தென்னக நுகர்வோர் மற்றும் மக்கள் பாதுகாப்புஇயக்கத்தின் தலைவரும் திருச்சி மாவட்டஉணவு பாதுகாப்பு பிரிவு வழிகாட்டுதல் குழு உறுப்பினருமான மனிதவிடியல் முனைவர் பி.மோகன் கலந்துக்கொண்டு புத்தாண்டு விழாகாலங்களில் பேக்கரி மற்றும் ஸ்வீட் கடைகளில் சிறப்பு ஆய்வு நடத்தவேணடும் நுகர்வோர் அங்கத்தினர்களுக்கு உணவுபொருள் சம்பந்தமாக சிறப்பு பயிற்சி அளிக்கவேண்டும் போன்ற கோரிக்கைகளை இக் கூட்டத்தின் வாயிலாக பதிவுசெய்தார். ஆட்சித்தலைவர்
கோரிக்கையை ஏற்று உடனடியாக நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார்.