
திருச்சி மாவட்டம் திருப்பராய்த்துறை தாருகாவணேஸ்வரர் கோவில் செயல் அதிகாரி திருமதி.ராகிணி தொடர்ந்து பொதுமக்களை மிகவும் மரியாதைக்குறைவாக நடத்துவதோடு கோவிலில் தேவார திருவாசகம் பாடும் ஓதுவார்களையும் மிகவும் தரக்குறைவாக பேசி அவமானப்படுத்தி வருகிறார் என வேதனையோடு கூறுகிறார்கள் கிராம மக்கள்.
மேலும் கோவிலுக்கு சொந்தமான நந்தவனம் கிராமத்தில் வசிக்கும் மக்களுக்கு இதுவரை எந்தவித அடிப்படை வசதிகளும் கிடைக்க விடாமலும் அவர்களின் வாழ்வாதாரத்தை தடுப்பதாகவும் குற்றம் சாட்டுகின்றனர்.
14 ஆண்டுகளுக்கும் மேலாக வனவாசம் போல வாழும் அவர்களுக்கு விடியல் எப்போது என முதன்முதலாக நமது சேனலில் செய்தி வெளியிட்டு அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றோம். அதன்பிறகு திருச்சி வந்திருந்த அறநிலையத்துறை அமைச்சர் மாண்புமிகு.சேகர்பாபுவை அணுகி கிராம மக்கள் தங்கள் இன்னல்களை கூறி விடியல் தர கோரிக்கை வைத்தனர். அவரும் உடனடியாக இணை ஆணையருக்கும் கோவில் நிர்வாக அதிகாரிக்கும் உத்தரவிட்டதோடு உரிய நடவடிக்கைகள் எடுக்குமாறு பணித்தார்.
தங்களுக்கு விடியல் வந்துவிட்டதென அந்த மக்கள் மகிழ்ந்திருந்த வேளையில் ராகிணி அவர்கள் வாடகை பாக்கி வைத்திருப்பதாக ஒரு ஓலையை நீட்டினார். உயர்நீதிபன்றமும் அவர்களுக்கு உரிய வசதிகளை செய்து தர உத்தரவளித்திருந்தும் அதே கிராமத்தின் அடுத்த பகுதியான அம்பேத்கர் நகர்மக்களிடம் வாடகைக்கான காசோலையை பெற்றுக்கொண்டு இன்றுவரை இரசீது தராமல் இழுத்தடிக்கிறார். குடிநீர் இல்லை மின்சாரம் இல்லை என வாழ்வாதாரத்திற்காக ஏங்கித்தவிக்கும் மக்களை சிறிதும் ஈவு இரக்கமின்றி வாட்டி வதைக்கிறார் இந்த அதிகாரி என கண்ணீரோடு கதறுகின்றனர் கிராம மக்கள்.
இப்போது இந்த பிரச்சனையை திருச்சி மாவட்ட சமூக நீதிப்பேரவை என்கின்ற அமைப்பு கையில் எடுத்துள்ளது.
அவர்களின் கண்டன சுவரொட்டி கீழே பகிரப்பட்டுள்ளது.
வன்மையாக கண்டிக்கிறோம்
தமிழக அரசே, காவல்துறையே, மாவட்ட நிர்வாகமே நடவடிக்கை எடு
தமிழக அரசுக்கும் அறநிலைய துறைக்கும் தொடர்ந்து பொது மக்களிடையே அவப்பெயர் ஏற்படுத்தி வரும் திருப்பராய்த்துறை செயல் அலுவலர் ராகிணி மீது துறை ரீதியான நடவடிக்கை எடு.
பலமுறை புகார் மனுக்கள் கொடுத்தும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்ப்பது ஏன்?
திருப்பராய்த்துறை தாருகானேஸ்வர் திருக்கோவிலில் உழவார பணி செய்ய, திருவாசகம் பாடவும் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியருக்கு அனுமதி மறுப்பு
அம்பேத்கார் நகர் எக்ஸ்டென்ஷனில் மக்களுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியும், காசோலை வாங்கிக் கொண்டும் ரசிது வழங்க மறுப்பு
15 வருடங்களாக அடிப்படை உரிமைகளான தண்ணீர், மின்சார வசதி இல்லாத நந்தவனம் மக்களுக்கு ரசிது வழங்க மறுப்பு
மார்கழி மாதத்தில் தாருகானேஸ்வரர் திருக்கோவிலில் பல வருடங்களாக நடை பெற்று வந்த திருவெம்பாவை, திருபள்ளியெழுச்சி பாடி குழந்தைகளுக்கு பிரசாதம், பரிசு பொருட்கள் கொடுக்க அனுமதி மறுப்பு.
எலமனூர் எலுமனாச்சி அம்மன் கோவில் பெயர் பலகை வைக்க இரண்டு வருடங்களாக அலையும் ஓய்வு பெற்ற அரசு மருத்துவர்
அல்லூர் கிராம ஊராட்சியில் கும்பாபிஷேக பணிகளுக்கு கூட்டம் போட்டு முக்கிய பிரமுகர்களிடம் கையெழுத்து வாங்கி விட்டு தற்போது கும்பாபிஷேக பணிகள் அனுமதி இல்லாமல் நடப்பதாக பொய் புகார்
அல்லூர் மற்றும் திருப்பராய்துறை கிராம பொது மக்களிடம் தரக்குறைவாக பேசியும் அநாகரிகமாக நடந்து கொண்டும், பிரிவினைவாதத்தை தூண்டியும், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும், திருப்பராய்த்துறை செயல் அலுவலர் ராகிணி மீது திருச்சி மாவட்ட காவல் துறையே நடவடிக்கை எடு.
சமூக நீதி பேரவை
திருச்சி மாவட்டம்
89032 90335
இந்து அறநிலையத்துறை அமைச்சரின் வார்த்தைகளுக்கும் மதிப்பளிக்காமல் கிராம மக்களின் உணர்வுகளுக்கும் மதிப பளிக்காமல் ஆணவத்தோடு செயல்படும் இவருக்கு ஈசன் தான் புத்தி தர வேண்டும்.