

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் திருச்சி புறநகர் வடக்கு மாவட்டத்தின் சார்பில் மாவட்ட ஒன்றிய பகுதி நகர பேரூர் கழக செயலாளர்கள் சார்பு அணி செயலாளர் கூட்டம் இன்று திருச்சிராப்பள்ளி புறநகர் வடக்கு மாவட்ட கழக அலுவலகம் அமைந்துள்ள தில்லைநகரில் நடைபெற்றது.

இந்த கூட்டத்திற்கு திருச்சிராப்பள்ளி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் மு பரஞ்சோதி தலைமை தாங்கினார்.

முன்னாள் அமைச்சர் கழக அமைப்புச் செயலாளர் எஸ் வளர்மதி முன்னாள் அமைச்சர் மாநில எம் ஜி ஆர் இளைஞர் அணி செயலாளர் என் ஆர் சிவபதி முன்னாள் அமைச்சர் பூனாட்சி முசிறி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் செல்வராஜ் பரமேஸ்வரி இந்திரா காந்தி

சிறுபான்மை அணி செயலாளர் புல்லட் ஜான் மணப்பாறை ஒன்றிய செயலாளர் செல்வராஜ் மாவட்ட இலக்கிய அணி செயலாளர் ஸ்ரீதர் முன்னாள் ஆவின் சேர்மன் எஸ் எம் ராஜேந்திரன் மாவட்ட ஜெ பேரவை இணைச் செயலாளர் சமயபுரம் ராமு தகவல் தொழில்நுட்ப பிரிவு மண்டல இணைச் செயலாளர் திருப்புகழ் தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட இணைச்செயலாளர் திருச்சி ஆமூர் சுரேஷ்ராஜா மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் ரவிசங்கர் அந்தநல்லூர் தெற்கு ஒன்றிய செயலாளர் தோப்பு நடராஜன் ஸ்ரீரங்கம் ஆனந்த் மற்றும் கழக நிர்வாகிகள் பொதுக்குழு உறுப்பினர்கள் மாவட்ட ஒன்றிய பகுதி நகர பேரூர் கழக செயலாளர் சார்பணி செயலாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
1. முன்னாள் முதலமைச்சர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே பழனிச்சாமி அவர்களின் ஆணைக்கிணங்க திருச்சி புறநகர் வடக்கு மாவட்டத்தில் ஒன்றியம் நகரம் பகுதி பேரூராட்சி ஆகியவற்றில் 9 பேர் கொண்ட பூத் கிளை அமைப்பது

2. இளைஞர் இளம்பெண்கள் பாசறை கிளைகளை ஒவ்வொரு பூத்களிளும் அமைப்பது்

3. இளம் தலைமுறை விளையாட்டு வீரர்கள் அணியில் உறுப்பினர்களை சேர்ப்பது.

4. 2026 சட்டமன்ற தேர்தலில் மாபெரும் வெற்றி வாகை சூடி கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் தலைமையில் ஆட்சி அமைப்பது.
ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
