

திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர் மு.பரஞ்ஜோதி.MA.BL, திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் ப.குமார்.BSc.,BL.Ex.MP, திருச்சி மாநகர் மாவட்ட கழக செயலாளர் J.சீனிவாசன் ஆகியோரின் அறிக்கை:-
மாண்புமிகு கழக பொதுச்செயலாளர், முன்னாள் முதலமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர், வருங்கால தமிழக முதலமைச்சர் அண்ணன் புரட்சித் தமிழர் எடப்பாடியார் அவர்களின் ஆணைக்கிணங்க…

இந்தி மொழி திணிப்பை எதிர்த்து மொழிப்போராட்டத்தில் அன்னை தமிழுக்காக இன்னுயிர் நீத்த மொழிப்போர் தியாகிகளுக்கு வீர வணக்கம் செலுத்த (25.1.2025, சனிக்கிழமை) காலை 10.35 மணி அளவில் திருச்சி நீதிமன்றம் அருகில் உள்ள புரட்சித்தலைவர் எம்ஜிஆர் சிலையிலிருந்து அமைதி ஊர்வலமாக சென்று மொழிப்போர் தியாகிகள் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து வீரவணக்கம் செலுத்தப்படும்.
அதுசமயம் தலைமை கழக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட கழக நிர்வாகிகள், மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வட்ட, கிளை, வார்டு கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்ட, ஒன்றிய முன்னாள் கவுன்சிலர்கள், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி கவுன்சிலர்கள் செயல்வீரர்கள், வீராங்கனைகள், தொண்டர்கள், மாணவரணியினர் மற்றும் மகளிரணியினர் அனைவரும் திரளாக கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இங்ஙனம்….
திருச்சி மாவட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்
