
திருத்தணி அரசு மருத்துவமனைக்கு உள்ளே அனுமதி இன்றி வரக்கூடாது என்று ஊடக சுதந்திரத்தில் பத்திரிகையாளர்களை அவமதிப்பு செய்த திருத்தணி மருத்துவமனை நிர்வாகம் மீது தமிழக முதல்வர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்
மருத்துவமனை நிர்வாகத்திற்கு தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் மாநிலத் தலைவர் :- அகில இந்திய பத்திரிகையாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர்/ டி.எஸ்.ஆர் சுபாஷ் கண்டனம் தெரிவித்துள்ளார்…
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அரசு மருத்துவமனையில் இரவு மற்றும் பகல் வேலைகளில் மருத்துவர்கள் பற்றாக்குறை உள்ளது தினம்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் இந்த மருத்துவமனையை பயன்படுத்தி வருகின்றனர்
தற்போது மாவட்ட மருத்துவமனையாக தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டுள்ள இந்த தி.மு.க ஆட்சியில் இந்த மருத்துவமனையில் செயல்பாட்டில் உள்ளது
இந்த மருத்துவமனை நிர்வாகத்தின் அலட்சியத்தால் நோயாளிகளுக்கு சரியான சிகிச்சை அளிக்காமல் நோயாளிகளை வெளியில் வீசிய சம்பவம், நோயாளிகளுக்கு குடிநீர் தட்டுப்பாடு, நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் பாரபட்சம் முறை, நோயாளிகளை தகாத வார்த்தையில் பேசும் செவிலியர்கள், சுகாதார சீர்கேடு மருத்துவமனை வளாகம், என்று பல்வேறு குற்றச்சாட்டுகள் சம்பந்தமாக திருத்தணியில் உள்ள அச்சு ஊடக பத்திரிகையாளர்கள் மற்றும் காட்சி ஊடக பத்திரிகையாளர்கள் செய்தி வெளியிட்டு வருகின்றனர்
இதனால் செய்தி வெளிய வரக்கூடாது மருத்துவமனைக்கு உள்ளே வரக்கூடாது என்று திட்டம் போட்ட மருத்துவமனை தலைமை மருத்துவர் ராதிகா தேவி
தமிழக அரசின் முத்திரைய பயன்படுத்தி இவராகவே முடிவு எடுத்து ஊடக நண்பர்கள் அனுமதி இன்றி மருத்துவமனைக்கு உள்ளே வரக்கூடாது என்று உத்தரவை போட்டார்
இந்த உத்தரவை ஸ்டிக்கர் மூலம் மருத்துவமனையில் உள்ள 20-க்கும் மேற்பட்ட பகுதிகளில் ஒட்டி உள்ளார்
மருத்துவமனைக்கு உள்ளே ஒரு பத்திரிகையாளர் வரக்கூடாது என்று சாமானியர்கள் கண்ணில் படும் அளவிற்கு இவர் பத்திரிகையாளர்களை அவமானம் செய்யும் அளவிற்கு இப்படி செய்த இவரது செயல் தலைமை மருத்துவர் டாக்டர் ராதிகா தேவி செய்த செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது
மேலும் இந்த மருத்துவமனையில் தலைமை மருத்துவர் ராதிகா தேவி எட்டு ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து வருகிறார், திருத்தணியில் தனியாக பைபாஸ் சாலையில் தனியார் மருத்துவமனையும் நடத்தி வருகிறார்
ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக இவர் மருத்துவமனையில் தலைமை மருத்துவராக செயல்படுகிறார்
இவர் இந்த மருத்துவமனையில் செயல்பட தொடங்கிய ஆண்டு முதல் தற்போது வரை பல்வேறு சச்சரவு சம்பவங்கள் நடைபெற்று வருகிறது மருத்துவமனை நிர்வாகம் செய்வதில் இவர் குளறுபடிகளை செய்து வருகிறார். மருத்துவமனையில் பல்வேறு பிரச்சனைகள் இருந்தபோதிலும் இவை அனைத்தையும் இவர் காதில் வாங்குவதில்லை என்ற சம்பவமும் செய்தியாளர்கள் செய்தி வெளியிட்டு வருகின்றனர்
இதனால் இவரைப் பற்றிய செய்தி மருத்துவமனை பற்றிய செய்தி வெளியே வரக்கூடாது என்று பத்திரிகையாளர்களை அவமானம் செய்யும் அளவிற்கு
உள்ளே வரக்கூடாது என்று இவர் செய்த இந்த செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது
மேலும் தமிழகத்தில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் இது போல் யாரும் பத்திரிகையாளர்கள் உள்ளே வரக்கூடாது என்ற ஒரு வாசகத்துடன் ஸ்டிக்கர் ஒட்டியது இல்லை
கொரோனா காலகட்டத்தில் கூட மருத்துவர்களுக்கும் பொதுமக்களுக்கும் பாலமாக துணிச்சலாக செயல்பட்டது பத்திரிகையாளர்கள்
பத்திரிகையாளர்களுக்கு நல வாரியம் அமைத்து அதனை பாதுகாத்து வரும் தமிழ்நாடு முதல்வர் மாண்புமிகு மு.க. ஸ்டாலின் அவர்கள் தங்களின் பார்வைக்கு
பத்திரிகையாளர்களை இப்படி அசிங்கப்படுத்தி காயப்படுத்தி மனதளவில் அவர்களை செய்த செயல் மிகவும் வேதனை அடைய வைத்துள்ளது
இந்த செயலுக்கு இந்த மருத்துவமனை தலைமை மருத்துவர் ராதிகா தேவியை துரை ரீதியான நடவடிக்கை இவர் மீது எடுக்க வேண்டும்
என்று தமிழ்நாடு முதல்வரை கேட்டுக்கொள்கிறோம்
பத்திரிகையாளர்களிடம் நிபந்தனை அற்ற மன்னிப்பு திருத்தணி அரசு தலைமை மருத்துவர் டாக்டர் ராதிகா தேவி கேட்க வேண்டும்
மாவட்ட மருத்துவ துறை அதிகாரிகளிடம் இதனை தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறார்கள் உடனடியாக இவர்கள் மீதும்
தமிழக முதல்வர் உடனடி நடவடிக்கை எடுத்து
பத்திரிகையாளர்களுக்கு உறுதுணையாக செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்
இங்கனம்
டி.எஸ்.ஆர். சுபாஷ்
தலைவர்:-தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம்,
பொதுச் செயலாளர்:-அகில இந்திய பத்திரிகையாளர்கள் சங்கம்.
தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம்
திருவள்ளூர் மேற்கு மாவட்ட நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள்…
