

உலக சுகாதார மையத்துடன் இணைந்து செயல்படும் யூ ஐ சி சி(UICC) யூனியன் ஃபார் இன்டர்நேஷனல் கேன்சர் கண்ட்ரோல் பட்டியலில் ஹர்ஷமித்ரா மருத்துவமனை மற்றும் கி ஆ பெ அரசு மருத்துவக் கல்லூரி இணைந்து நடத்தும் பிப்ரவரி 4 உலக புற்றுநோய் தின விழிப்புணர்வு பேரணி அதிகாரப்பூர்வமாக திருச்சியிலேயே முதன்முறையாக மற்றும் தமிழகத்திலேயே இரண்டாவது இடமாக பதிவு செய்யப்பட்டுள்ளது . இப்பேரணியில் தனலட்சுமி ஸ்ரீனிவாசன் மருத்துவக் கல்லூரி, பெரியார் மணியம்மை மருந்தியல் கல்லூரி, இந்திரா கணேசன் கல்வி நிறுவனங்கள், சர்வைட் செவிலியர் கல்லூரி ,மாரியம்மன் செவிலியர் கல்லூரி, கி.ஆ.பெ.விஸ்வநாதம் மருத்துவ கல்லூரி, பிங்க் கிராஸ் சொசைட்டி ,ரோஸ் கார்டன் அறக்கட்டளை மற்றும் பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் இப்பேரணியில் இணைந்து கைகோர்க்கின்றனர். இந்த வருடத்தின் மையக்கருத்தான யுனைடெட் பை யுனிக் “United by Unique”
“தனித்துவத்தால் ஒருங்கிணைதல்” என்பதை வலியுறுத்தி இப்ப பேரணி நடைபெற உள்ளதாக டாக்டர். க. கோவிந்தராஜ்., புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர் நிர்வாக இயக்குனர் ஹர்ஷமித்ரா மருத்துவமனை அவர்கள் தெரிவித்தார். புற்றுநோய்க்கான சிகிச்சை என்பது பல மருத்துவ நிபுணர்கள் அடங்கிய மருத்துவ குழு ஒருங்கிணைந்து ஒவ்வொரு புற்றுநோயாளியின் தேவை உணர்ந்து தனி கவனம் செலுத்தி சிகிச்சை அளிப்பதே தரமான புற்றுநோய் சிகிச்சையாகும்.

நடக்கவிருக்கும் இந்த மாபெரும் விழிப்புணர்வு பேரணியின் நிகழ்வான யூ ஐசிசி(UICC) யூனியன் ஃபார் இன்டர்நேஷனல் கேன்சர்
என்ற உலகளாவிய அளவில் உலக சுகாதார மையத்துடன் இணைந்து செயல்படும் கூட்டமைப்பில் அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. “இதன் மூலம் திருச்சியிலேயே முதன் முறையாக மற்றும் தமிழகத்திலேயே இரண்டாவது இடமாக புற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தை முன்னெடுப்பதில் உலகளாவிய அளவில் ஹர்ஷமித்ரா மருத்துவமனை தனது முன்னெடுப்பை செய்து திருச்சிக்கு பெருமை சேர்த்துள்ளது பற்றி மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம்” என்றார் மருத்துவர் க. கோவிந்தராஜ் அவர்கள் .
எனவே பிப்ரவரி 4 அன்று நடக்கப்போகும் இப் மாபெரும் பேரணியில் அனைவரும் பெருந்திரளாக கலந்து கொண்டு புற்று நோய்க்கு எதிரான போராட்டத்தில் கைகொடுப்போம் காலை 9 மணி அளவில் கி.ஆ.பெ விஸ்வநாதம் அரசு மருத்துவக் கல்லூரியில் தொடங்கி அண்ணல் காந்தி மெமோரியல் அரசு மருத்துவமனையில் இப்பேரணி நிறைவு பெறுகிறது.
