


அண்ணாவின் 56வது நினைவு நாளை முன்னிட்டு திருச்சி அமமுக தெற்கு மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் முன்னிலையில் அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை .


அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொது செயலாளர் அவர்களின் ஆணைக்கிணங்க,
பேரறிஞர் அண்ணா அவர்களின் 56வது நினைவு நாளை முன்னிட்டு
திருச்சி மேல சிந்தாமணியில் உள்ள பேரறிஞர் அண்ணா
திரு உருவ சிலைக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில்,
திருச்சி தெற்கு மாவட்ட அவைத் தலைவர் ராமலிங்கம் அவர்கள் தலைமையில்,
தலைமைக் நிலையைச் செயலாளர், திருச்சி வடக்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான ராஜசேகரன் அவர்கள்,
திருச்சி தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் மாமன்ற உறுப்பினருமான ப. செந்தில்நாதன் அவர்கள்,

கழக ஆட்சி மன்ற குழு உறுப்பினர், மலைக்கோட்டை பகுதி செயலாளர் கமுருதீன் ஆகியோர்
முன்னிலையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இந் நிகழ்ச்சியில்
மாவட்ட நிர்வாகிகள், மாநில நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள், பகுதி செயலாளர்கள் நிர்வாகிகள்,ஒன்றிய செயலாளர்கள், நிர்வாகிகள்,
சார்பு அணி செயலாளர்கள், நிர்வாகிகள், நகராட்சி செயலாளர்கள், நிர்வாகிகள், பேரூராட்சி செயலாளர்கள் , நிர்வாகிகள், வட்ட செயலாளர்கள், நிர்வாகிகள், ஊராட்சி செயலாளர்கள், கிளை நிர்வாகிகள், தொண்டர்கள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.