தமிழக அரசால் வழங்கப்பட்டு வரும் பத்திரிகையாளர் அங்கீகார அட்டை (Accreditation Card)

தமிழக முதல்வருக்கு தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம் கோரிக்கை..!

தமிழக அரசால் வழங்கப்பட்டு வரும் பத்திரிகையாளர் அங்கீகார அட்டை (Accreditation Card) நடுத்தரம் மற்றும் சிறு குறு நாளிதழ்களுக்கு புதுப்பித்தல் / புதியது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பல வருடங்களாக முறையாக பத்திரிகை நடத்தி அங்கீகார அட்டை பெற்று வந்தவர்களுக்கு இந்த ஆண்டு திடீர் என அடையாள அட்டையை நிறுத்தியதால் தமிழகம் முழுவதிலும் ஆயிரக்கணக்கான பத்திரிகையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பத்திரிகையாளர் அங்கீகார அட்டை (Accreditation Card) இந்த (2025) ஆண்டு பெரிய பத்திரிகைகள் மற்றும் முன்னணி தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.

பெரிய பத்திரிகை, முன்னணி தொலைக்காட்சி நிறுவனங்கள் மற்றும் கார்பரேட் நிறுவனங்கள் மட்டுமே பத்திரிகை மற்றும் ஊடகத்துறையில் இருக்க வேண்டும். சிறு குறு பத்திரிகை நிறுவனங்களை துறையில் இருந்து அகற்றும் வகையில் பத்திரிகையாளர் அங்கீகார அட்டை குழுவினர் (Accreditation Committee) செயல்பட்டு வருவது வருத்தமளிக்கிறது. பாகுபாடு, பாரபட்சம் பார்க்காமல் அனைவரையும் சமமாக நடத்திட வேண்டுகிறோம்.

இன்றைய டிஜிட்டல் யுகத்தில் தினசரி 10 ஆயிரம் பிரதிகள் அச்சடிக்க வேண்டும் என்ற நடைமுறையில் சாத்தியமில்லாத விதியை காரணம் காட்டி அங்கீகார அட்டையை நிறுத்தி வைத்துள்ளனர். அச்சு ஊடகத்தின் இன்றைய நிலை என்ன? சிறு குறு பத்திரிகைகள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் பற்றி எதுவுமே தெரியாத நபர்களை கொண்ட பத்திரிகையாளர் அங்கீகார குழுவின் (Accreditation Committee) செயல்பாடு எப்படி சரியானதாக இருக்கும்? அங்கீகார அட்டை வழங்குவதில் பாரபட்சம் காட்டி வரும் செய்தித்துறை மீது பத்திரிகையாளர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

நடுத்தரம் மற்றும் சிறு குறு பத்திரிகைகளுக்கு பெரிய விளம்பரம் மற்றும் விற்பனையோ இருப்பது இல்லை. ஆனாலும் பெரும் சிரமத்திலும் குறைந்த எண்ணிக்கையில் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கிறது. அச்சடிக்கும் எண்ணிக்கையை பார்க்காமல் தொடர்ந்து வெளிவரும் தன்மையை அறிந்து அனைவருக்கும் அரசு அடையாள அட்டை உடனடியாக வழங்கிட வேண்டுகிறோம்.

மாண்புமிகு தமிழக முதலைமைச்சர் அவர்கள் மற்றும் செய்தித்துறை அமைச்சர் இவ்விவகாரத்தில் தனி கவனம் செலுத்தி விண்ணப்பித்த அனைவருக்கும் அரசு அடையாள அட்டையை வழங்கிட உத்தரவிடுமாறு தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம் கேட்டுக் கொள்கிறது.

பத்திரிகையாளர் நலனில்..
எஸ். சரவணன்
தலைவர்
தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம்
9840035480

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    என் சி சி பி ஏ (NCCPA) சார்பாக மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டமானது திருச்சியில் நடைபெற்றது

    இன்று திருச்சிராப்பள்ளி தலைமை அஞ்சலகம் முன்பாக மத்திய அரசனை கண்டித்து நேஷனல் குவார்டினேஷன் கமிட்டி ஆப் பென்ஷன் அஸ் அசோசியேசன் ( NCCPA)மற்றும், (AIPRPA)ஏ ஐ பி ஆர் பி ஏ , (AIBDPA)ஏ ஐ பி டி பி ஏ,…

    வக்பு வாரிய சட்ட திருத்தத்திற்கு எதிராக எஸ்டிபிஐ கட்சியினர் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

    வக்பு வாரிய சட்டத்தை கண்டித்து இந்தியா முழுவதும் பல்வேறு இஸ்லாமிய அமைப்பினர் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக திருச்சி பாலக்கரை ரவுண்டானா பகுதியில் எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் மத்திய அரசு கண்டித்து வக்பு வாரிய சட்டத்தை திரும்ப…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *