
கோவை ஆர்டிஓ அலுவலகங்களில் இடைத்தரகர்கள் நுழைய தடை. திருச்சியில் நடைமுறைப்படுத்தப்படுமா?
கோவை வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் தொடர்ந்து இடைத்தரர்களின் ஆதிக்கம் அதிக அளவில் இருந்ததை அடுத்து தொடர் புகார்கள் சென்றதன் எதிரொலியாக கோவை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் புரோக்கர்கள் உள்ளே நுழைய தடை செய்யப்பட்டு அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இதேபோல் திருச்சி மாவட்டத்தில் ஸ்ரீரங்கம் திருச்சி கிழக்கு வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் நடைமுறைப்படுத்தப்படுமா என பொதுமக்கள் எதிர்பார்ப்பு. கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஸ்ரீரங்கம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்சப் புகார் காரணமாக லஞ்ச ஒழிப்பு துறையினர் திடீர் ஆய்வு மேற்கொண்டு கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டு இரண்டு ஊழியர்களின் மேல் விசாரணையும் நடைபெற்று வரும் சூழ்நிலையில் ஸ்ரீரங்கம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் புரோக்கர்களின் ஆதிக்கம் இன்னும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அனைத்து இடங்களிலும் கண்காணிப்பு கேமரா இருந்த பொழுதிலும் கவுண்டர்களில் வரிசையில் அவர்களே அதிக அளவில் இருக்கின்றனர். இது பற்றி அலுவலக ஊழியர்களிடம் கேட்டபொழுது அலுவலக விவரங்கள் அனைத்தும் அவர்களுக்கே தெரியும் என்றும் அவர்களுக்கு ஆதரவாகவே செயல்படுகின்றனர். கோவை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் இடைத்தரகர்கள் உள்ளே நுழைய தடை செய்யப்பட்டு சுற்றறிக்கை வழங்கிய நிலையில் ஸ்ரீரங்கம் மற்றும் திருச்சியில் உள்ள மற்ற போக்குவரத்து வட்டார அலுவலகங்களுக்கும் இது நடைமுறைப்படுத்தப்படுமா என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
