
திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர் மு.பரஞ்ஜோதி.MA.BL அறிக்கை:-
மாண்புமிகு கழக பொதுச்செயலாளர், முன்னாள் முதலமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர், வருங்கால தமிழக முதலமைச்சர் அண்ணன் புரட்சித் தமிழர் எடப்பாடியார் அவர்களின் ஆணைக்கிணங்க…

தமிழ் திரையுலகில் மாபெரும் சகாப்தமாக விளங்கிய பழம்பெரும் கதாநாயகரும், சிறந்த பாடகரும், ரசிகர் பெருமக்களால் “M.K.T” என அன்புடன் அழைக்கப்படுபவருமான எழில் இசை மன்னர் திரு.எம்.கே.தியாகராஜ பாகவதர் அவர்களின் 116-ஆவது பிறந்த நாளான (1.3.2024, சனிக்கிழமை) காலை 10:35 மணி அளவில் திருச்சியில் அமைந்துள்ள அவரது மணிமண்டபத்தில் இருக்கும் திருவுருச் சிலைக்கு திருச்சி மாவட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட உள்ளது.

அதுசமயம் தலைமை கழக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட கழக நிர்வாகிகள், மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வட்ட, கிளை, வார்டு கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூராட்சி கவுன்சிலர்கள், செயல்வீரர்கள், வீராங்கனைகள், தொண்டர்கள் மற்றும் மகளிரணியினர் அனைவரும் திரளாக கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
நன்றி..
அன்புடன்….
மு.பரஞ்ஜோதி.MA.BL
மாவட்ட கழக செயலாளர்
முன்னாள் அமைச்சர்
திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அஇஅதிமுக.