

திருச்சி மாநகராட்சி, மண்டலம் 4, வார்டு 53-ல் உள்ள கணபதிபுரம் பகுதியில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு புதை வடிகால் பணிக்காக தோண்டப்பட்ட குழிகள் சரிவர மூடப்படாமல் குண்டும் குழியுமாக காட்சியளிக்கின்றது.
இது தொடர்பாக, இளநிலை பொறியாளரிடம் கேட்ட போது ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பணி செய்த ஒப்பந்ததாரரின் அலட்சியத்தின் காரணமாக இரண்டு ஆண்டுகளாக சாலைகள் அமைக்காமல் உள்ளதாகவும், இப்பணி தொடர்பாக மாநகராட்சி ஆணையரின் நேரடி கண்காணிப்பில் இருப்பதால் புகார் தொடர்பாக மாநகராட்சி ஆணையரையே நேரடியாக கேட்டுக் கொள்ளுங்கள் என அலட்சியமாக பதில் தெரிவிப்பதாக புகார் தெரிவிக்கின்றனர்.

மாநகராட்சி மற்ற பகுதிகளில் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிக்காக தோண்டப்பட்ட குழிகள் அனைத்தும் மூடப்பட்டு சாலைகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் கணபதிபுரத்தில் சாலை அமைக்காமல் பணி செய்தது போன்று முறைகேடாக அரசு நிதியை கையாடல் செய்யப்பட்டதா என கேள்வி எழுப்பும் பொது மக்கள்.