
தமிழகம் எங்கிலும் பேனர் கலாச்சாரம் பெருகி நின்றதான் காரணமாக சென்னையில் ஒரு அப்பாவி பெண் பேனர் விழுந்து அதன் காரணமாக லாரி மோதி பலியானார்.

சமூக ஆர்வலரும் போராளியான அமரர் அய்யா traffic ராமசாமி அவர்கள் நீதிமன்றத்தை அணுகி தடை ஆணை பெற்றார்.
அப்போது எதிர் கட்சி தலைவராக இருந்த இன்றைய தமிழக முதல்வர் ஸ்டாலின் தன் கட்சியினருக்கு பேனர் வைக்க தடை விதித்து நீதிமன்றத்திலும் உறுதி அளித்தார்.
காலம் மாறியது களம் மாறியது. திமுக ஆட்சி பொறுப்பை ஏற்றது, ஸ்டாலின் முதல்வர் ஆனார். ஆனால் எதிர்கட்சி தலைவராக ஸ்டாலின் தந்த உறுதிமொழியை அவரின் கட்டளையை இப்போது அவரின் உடன்பிறப்புகள் புறக்கணித்து திருச்சி நகர் முழுவதும் பேனர் கலாச்சாரத்தை தொடங்கி வைத்து அது இன்று ஶ்ரீரங்கம் காவல் நிலையம் வரை வந்து விட்டது.

ஆம்…….
ஶ்ரீரங்கம் காவல் நிலையம் எதிரிலேயே ராஜகோபுரம் அருகிலேயே ஆளுயர பேனர்களை வைத்து உடன்பிறப்புகள் தலைவரின் பிறந்தநாளை கொண்டாடி வருகின்றனர்.

மீண்டும் ஒரு உயிர் பலியாகவிடாமல் தமிழர்களின் பாசம் மிகு மரியாதைக்குரிய அப்பா அவர்கள் இந்த கட்அவுட் கலாச்சாரத்தை களை எடுக்க வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கை.