

Tamil Nadu story என்கின்ற பெயரில் ஒரு புதிய திரைப்படம் உருவாக இருக்கின்றது கிடுகு, கலன், நாதுராம் கோட்சே போன்ற திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் வீரமுருகன் இந்த திரைப்படத்தை இயக்கியிருக்கின்றார்.
பாரதீய ஹிந்துகலாச்சார தமிழ்சேவாடிரஸ்ட் இந்த திரைப்படத்தை தயாரிக்கிறது.
இந்த திரைப்படம் ஆனது crowd fund என்கின்ற மக்களின் நன்கொடை மூலமாக உருவாக்கப்பட இருக்கின்றது.
மேலும் 1968 காலகட்டங்களில் நிகழ்ந்த வெண்மணி சம்பவங்களையும் மற்றும் அதே காலகட்டத்தில் நடந்த ஒரு குறிப்பிட்ட இன அழிப்பு போராட்டத்தையும் மையமாக வைத்து இந்த திரைப்படத்தை இயக்கியிருப்பதாகவும் அவர் கூறுகின்றார்.
தயாரிப்பு நிவாகம் பொதுமக்களிடம் வைக்கும் கோரிக்கை என்னவென்றால் இந்த திரைப்படம் உருவாகுவதற்காக பொதுமக்கள் தங்களுடைய நன்கொடையாக ஒரு ரூபாயிலிருந்து தங்களால் இயன்ற நன்கொடையை தந்து உதவுமாறு அன்போடும் தாழ்மையோடும் விண்ணப்பிப்பதாக அறிவிக்கின்றது.
. இந்த திரைப்படத்திற்காக உருவாக்கப்பட்டுள்ள கமிட்டியின் வங்கி கணக்கு எண்ணையும் பகிர்ந்துள்ளனர்.. விருப்பமுள்ளவர்கள் இந்த வங்கிக் கணக்கில் நன்கொடை அளிக்கலாம்.
