தமிழக அமைச்சர் மீது கடுமையான கண்டனத்தை பதிவு செய்த பாஜக மாநில செய்தி தொடர்பாளர்

பாஜகவையும், தலைவர் அண்ணாமலையையும் விமர்சிக்க அரசியல் சாக்கடைகளுக்கு தகுதியில்லை

திமுகவின் சகுனி அமைச்சர் சேகர்பாபு. மகாபாரதத்தில் சகுனி எப்பொழுதும் பாண்டவர்களையும் கிருஷ்ணனையும் அழிக்க வேண்டும் என்று அனுதினமும் சிந்தித்தது போல, தமிழகத்தில் பாஜகவின் வளர்ச்சியும், அண்ணாமலையின் எழுச்சியையும் அழிக்க சதுரங்க வேட்டை அரசியல் செய்து வருவதால் புத்தி கெட்டு போய், கடல் வற்றி கருவாடு தின்னலாம் என காத்திருந்த கொக்கு, குடல் வற்றி இறந்து போகும் என்று, 2026- சட்டமன்றத் தேர்தலில் திமுக ஆட்சிக்கு முடிவு கட்ட பாஜக அமைக்க உள்ள மகா,மெகா வெற்றி கூட்டணி உருவாவதை தடுக்க, இலவு காத்த கிளி போல காத்திருக்கும் திமுக முதல்வர் அண்ணன் ஸ்டாலினுக்கு சொல்ல வேண்டிய கதையை பாஜகவிற்கு சொல்லி இருக்கிறார்.

தமிழக அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தொடர்ந்து தமிழக பாஜக பற்றி, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை பற்றி அரசியல் நாகரீகம் இல்லாமல் மிகவும் மோசமான முறையில் தொடர்ந்து விமர்சித்து வருவதை இனி நிறுத்திக்கொள்ள வேண்டும்.

பாஜகவை, பிரதமர் மோடியை விமர்சிக்கும் நபர்களை பாராட்டுவது தனி நபர் துதி பாடுவது, பெரியார் என்று அழைக்கப்படும் ஈ.வே.ராமசாமியின்பெயரால் விருது வழங்குவது, மற்றும் திமுகவினர் குறைகளை, அரசின் தவறுகளை சுட்டிக் காட்டுபவர்கள் மீது அவதூறு பேசுதல், பொய் வழக்கு போடுதல் போடுதல், கொச்சையாக விமர்சித்தல் என்கிற திமுகவின் நாடக அரசியலுக்கு இனி பாஜக முற்றுப்புள்ளி வைக்கும்.

திமுகவினர் அண்ணாமலையைப் போல இறக்குமதி செய்யப்பட்டவர்கள் அல்ல என்று இதற்கு முன் கூறிய அமைச்சர் சேகர்பாபு, அண்ணா திமுக விற்கும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கும் செய்த துரோகத்தால் வெளியேற்றப்பட்டு திமுகவில் இறக்குமதி செய்யப்பட்டவர் என்பதை மறந்து விடக்கூடாது.

இந்தியாவின் அடித்தட்டு மக்களுக்காக பணியாற்ற வேண்டும் என்று, பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் ஈர்க்கப்பட்டு, உலகின் தூய்மையான மக்கள் நிலை இயக்கம் ஆர்.எஸ்.எஸ் ஆள் பயிற்சி அளிக்கப்பட்டு தேசிய கட்சி பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டு, தமிழக பாஜகவின் கமலாலயத்தின் தூணாக, ஒடுக்கப்பட்டுள்ள மக்களின் கலங்கரை விளக்கமாக தமிழக பாஜக தலைவராக நேர்மையோடு, மக்கள் நல பணிகளை செய்து வருகிறார் . அவரைப் பற்றி பேசுவதற்கு சேகர்பாபுவுக்கு எள்ளளவும் தகுதியில்லை.

திராவிட மாடல் விடியா திமுக அரசின் மக்கள் விரோத போக்கால் தமிழகம்
ஊழல், வகுப்புவாதம், பிரிவினைவாதம் மதவாதம், தீவிரவாதம் தலை விரித்தாடும் மாநிலமாக மாறிக் கொண்டிருக்கிறது. கொலை,கொள்ளை கற்பழிப்பு, போதை கலாச்சாரம் என கலாச்சார சீர்கேடுகளின் சங்கமமாகவும் பெண்களுக்கு எதிரான தொடர் பாலியல் வன்முறை மற்றும் குறிப்பாக பள்ளி செல்லும் சிறுமியருக்கு பாதுகாப்பில்லாத சூழ்நிலையில் பெண்ணினமே துன்பப்பட்டு வாழக்கூடிய சூழ்நிலையில், மக்கள் நலனுக்காக, திமுக அரசை தட்டிக் கேட்கும் பாஜகவினரை நோக்கி, வெட்கமில்லாமல், தமிழக மக்கள் பாதிக்கப்படுவதை பற்றி கவலைப்படாமல் சூடு சொரணை இல்லாமல், “திராவிட மண்ணில் பிரிவினை ஏற்படுத்த முயற்சிக்கும் பாஜகவை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்” என்று கூறும் ஊழல் திமுக அரசின் ஊதுகுழல் சேகர் பாபுவுக்கு இதுவே இறுதி எச்சரிக்கை.

வட சென்னையில் தன்னுடைய சட்டத்திற்கு புறம்பான செயல்களால், சிறையில் இருக்க வேண்டிய அமைச்சர் சேகர்பாபு, முதல்வர் ஸ்டாலின் தவறான அரசியலை, ஆட்சியின் குறைகளை சுட்டிக்காட்டியதற்காக,தமிழக பாஜகவின் பெருமைமிகு தலைவர் அண்ணாமலை அவர்களைப் பார்த்து, “கீழ்பாக்கத்தில் இருக்கவேண்டிய அண்ணாமலை இங்கே பிதற்றிக் கொண்டிருக்கிறார்” என்று நாகரிகம் இல்லாமல் கொச்சையாக பேசி விளம்பர அரசியல் செய்வதற்கு முடிவு கட்டும் நேரம் வந்துவிட்டது.

அடிமட்ட தொண்டனை வச்சு அண்ணாமலையை தோற்கடிப்போம்! வாய்சவால் விட்ட அமைச்சர் சேகர்பாபு , கடந்த பாராளுமன்றத் தேர்தலில் முதல்வர் அவர்களின் கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் 2024 பாராளுமன்ற தேர்தலில், 2021 சட்டமன்றத் தேர்தலில் கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் திமுக பெற்ற வாக்குகளை விட பத்தாயிரத்து ஐநூறு வாக்குகள் குறைவாக பெற்றது ஏன்? என்று விளக்கம் சொல்வாரா?

கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் ஆறு வட்டங்களிலும், “அறநிலைத்துறை அமைச்சரா? இல்லை மளிகை கடை மேனேஜரா? ” என்று மக்கள் அனைவரும் சிந்திக்கும் அளவிற்கு திமுக கட்சியின் மக்கள் நலத் திட்டங்கள் இன்று புனைப் பெயரால் ஊழல் பணத்தில் ஏழை பல்லாயிரக்கணக்கானமக்களுக்கு மளிகை சாமான் கொடுத்து ஏமாற்றியும் வாக்குகள் வராமல் போனது ஏன்? என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

தீய சக்தி திமுகவின் மக்கள் விரோத போக்கை, ஜனநாயகத்துக்கு விரோதமாக, சட்டத்திற்கு விரோதமாக எதிர்க்கட்சியினரை காவல்துறையைக் கொண்டு பழிவாங்கும் போக்கை தட்டி கேட்ட தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை பார்த்து, கர்நாடக டூப் போலீஸ் அண்ணாமலை என்று விமர்சனம் செய்து சுய இன்பம் காணும் அரசியல் சாக்கடை அமைச்சர் சேகர்பாபுவின் சுய ரூபங்கள், வண்டவாளங்கள், அறநிலை துறை ஊழல்கள், கோயில் சொத்துகளில் சட்டத்திற்கு புறம்பாக சென்னை மாநகராட்சி அனுமதி இல்லாமல் வடசென்னையில் போலி பினாமிகள் பெயரில் கட்டப்பட்டு வரும் கட்டிடங்கள் குறித்தும் வெகு சீக்கிரத்தில் பாஜக மக்கள் மன்றத்தில் முன் வைக்கும். சட்டப்படி நடவடிக்கை எடுக்கும்.

அறநிலையத்துறையின் நிர்வாக சீர்கேடுகளை கலைந்து, ஊழல்களை தடுத்து முன்மாதிரி அமைச்சராக இருக்க வேண்டிய தகுதி சேகர்பாபுவுக்கு இல்லை என்பதை அனைவரும் அறிவோம். தமிழக பாஜக தலைவரை இகழ்ந்து பேசி, திமுக அமைச்சராக நீடித்து விடலாம் என்று இரண்டாம் தர நாடக அரசியலை சேகர்பாபு செய்வதை திமுக கட்சியினரே புரிந்து கொண்டுள்ளனர். ஏக்னக்வேசேகர் பாபுவின் வார்த்தை முட்களால் எந்த பயனும் இல்லை என்பதை உணர்ந்து இந்த முள்ளம்பன்றி அரசியலை உடனடியாக அவர் நிறுத்திக் கொள்ள வேண்டும்.

ஏ.என்.எஸ்.பிரசாத்
தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர்
கைபேசி : 9840170721

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    என் சி சி பி ஏ (NCCPA) சார்பாக மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டமானது திருச்சியில் நடைபெற்றது

    இன்று திருச்சிராப்பள்ளி தலைமை அஞ்சலகம் முன்பாக மத்திய அரசனை கண்டித்து நேஷனல் குவார்டினேஷன் கமிட்டி ஆப் பென்ஷன் அஸ் அசோசியேசன் ( NCCPA)மற்றும், (AIPRPA)ஏ ஐ பி ஆர் பி ஏ , (AIBDPA)ஏ ஐ பி டி பி ஏ,…

    வக்பு வாரிய சட்ட திருத்தத்திற்கு எதிராக எஸ்டிபிஐ கட்சியினர் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

    வக்பு வாரிய சட்டத்தை கண்டித்து இந்தியா முழுவதும் பல்வேறு இஸ்லாமிய அமைப்பினர் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக திருச்சி பாலக்கரை ரவுண்டானா பகுதியில் எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் மத்திய அரசு கண்டித்து வக்பு வாரிய சட்டத்தை திரும்ப…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *