
திருச்சிராப்பள்ளி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவில் தமிழகத்தின் மிகப் பிரபலமான பிரசித்தி பெற்ற திருக்கோவிலாகும். இந்த திருக்கோவிலுக்கு தமிழக மக்கள் மட்டுமின்றி பல மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் அம்மனை தரிசிப்பதற்காக விரதம் இருந்து வருகின்றனர். தற்சமயம் சமயபுரம் மாரியம்மன் பச்சை பட்டினி விரதம் இருப்பதால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து பூக்குழி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்துவதற்கு ஆலயம் நோக்கி வந்து கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் வரும் பக்தர்களை கோவிலின் பெண் அதிகாரியான நித்தியா என்ற நபர் மிகவும் தரக்குறைவாகவும் அவமரியாதை செய்யும் விதத்திலும் பேசியும் அவர்களை இழிவு படுத்தியும் வருவது தொடர்வாடிக்கையாக உள்ளது.

மேலும் அந்த அதிகாரியோடு துணை நிற்கும் கைத்தடிகள் அந்த பெண் அதிகாரி இட்ட கட்டளைக்கு கட்டுப்பட்டு மகுடிக்கு ஆடும் பாம்பு போல பக்தர்களை ஆடு மாடுகளை விரட்டுவது போல விரட்டுவது வாடிக்கையாக உள்ளது ஆனால் அதே நேரம் முக்கிய மனிதர்கள் வந்தால் அவர்களிடம் கையூட்டு பெற்றுக் கொண்டு அவர்களுக்கு எல்லா விதத்திலும் சலுகை காட்டுவது தொடர் கதையாக உள்ளது. கோவில் என்பது பக்தர்களின் மன அமைதிக்கான ஒரு தளமாகும். ஆனால் பணம் இருப்பவர்களிடம் ஒரு விதமாகவும் பணம் இல்லாமல் வரும் ஏழை பக்தர்களிடம் ஒரு விதமாகவும் நடந்து கொள்ளும் இந்த அதிகாரியின் ஆணவப் போக்கினை மாற்றுவது யார்?

இதை தட்டிக் கேட்கும் உள்ளூர் மக்களையும் பத்திரிகையாளர்களையும் மிகவும் தரக்குறைவாக விமர்சனம் செய்கிறார், நான் அப்படித்தான் செயல்படுவேன் உங்களால் என்ன செய்ய முடியும் என்று ஆணவத்தோடு பேசுகின்றார். மேலும் கோவிலில் பணிபுரியும் ஊழியர்களையும் மிகவும் தரக்குறைவான வார்த்தைகளால் திட்டுவது வாடிக்கையாக உள்ளது. இதை பெயர் சொல்ல விரும்பாத ஊழியர்கள் மிகவும் மன வேதனையோடு நம்மிடம் தெரிவிக்கிறார்கள். இவற்றையெல்லாம் கவனித்து சரி செய்ய வேண்டிய கோவிலின் துணை ஆணையர் எந்தவிதமான நடவடிக்கையும் இவர் மீது எடுக்காமல் அவரை அவர் இஷ்டத்திற்கு ஆட விடுகின்றார். இந்து அறநிலையத்துறையின் நேர்மையான அதிகாரி என்று பெயர் பெற்ற இணை ஆணையர் கல்யாணி இந்த கோவிலின் பெண் அதிகாரி நித்யா மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து பக்தர்களின் மனதை குளிர செய்ய வேண்டும் என்பதே பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது. நேர்மைக்கு பெயர் போன இணை ஆணையர் கல்யாணி என்ன செய்யப் போகின்றார் என்பதே நமது கேள்வி.
