
இஸ்லாமியரின் உயர்ந்த மாதமாகவும், சிறப்புக்குரிய மாதமாக கருதப்படும் ரம்ஜான் மாதமாகும் இந்த பண்டிகையை முன்னிட்டு உணவு உண்ணாமலும், தண்ணீர் அருந்தாமலும் நோம்பு இருந்து வருகின்றனர்.
மேலும், சமுக நல்லிக்கணத்தை பேற்றும் வகையில் அனைத்து இந்து, கிறிஸ்தவர்கள் என சாதி, மத, போதமின்றி கலந்து கொண்டு அன்பை வெளிப்படுத்தும் விதமாக நோன்பு திறக்கும் நிகழ்வு அனைத்து இஸ்லாமியர் அமைப்பினரும் நடத்தி வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக இன்று
எஸ்டிபிஐ கட்சி தெற்கு மாவட்ட வர்த்தக அணி சார்பில் சமூக நல்லிணக்க இப்தார் நிகழ்ச்சி திருச்சி குட்செட் ரோட்டில் உள்ள கே.எம்.எஸ்.மினி ஹாலிலில் மாவட்ட தலைவர் பக்ருதீன் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளர்களாக மாநில தலைவர் அமீர்அம்சா, மற்றும் மாநில நிர்வாகிகள கலீல்ரகுமான், சாதிக்பாஷா, இமாம்ஹசான்பைஜி , மாவட்ட நிர்வகிகள அன்சார், முகமதுசித்திக், தளபதிஅப்பாஸ் உட்பட பலர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர்.

மேலும் நோன்பு திறக்கும் பிரார்த்தனையில் தமிழ்நாட்டில் அமைதி நிலவும் சமூக ஒற்றுமையுடன் வாழவும் சாதி மதம் வேறுபாடு இன்றி ஒற்றுமையுடன் வாழவும் பிரார்த்தனை செய்து நோன்பு திறப்பு நிகழ்வு நடைபெற்றது.

இந்நிகழ்வில் நிர்வாகிகள் ஷேக்அப்துல்லா, முஹம்மது அன்சாரி, முகமதுஇப்ராஹிம் மற்றும் பகுதி கழக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
