
திருச்சி, மார்ச்.21-
மத்திய தொழிற்சங்கத்தின் சார்பில் மே மாதம் 25ஆம் தேதி நடைபெற உள்ள அகில இந்திய பொது வேலை நிறுத்தத்தில் பங்கு பெற உள்ள திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மயிலாடுதுறை மாவட்டங்களில் உள்ள நிர்வாகிகள் பங்கு பெறும் ஆயத்த திருச்சி மண்டல மாநாடு திருச்சி மத்திய பேருந்து அருகிலுள்ள சீனிவாசா திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொழிலாளர் விடுதலை முன்னணியின்
மாநில பேரவை அமைப்பாளர் பேரறிவாளன்,நிர்வாகிகள் பேரவை மாநில பொறுப்பாளர்
மகிழரசு, தொழிலாளர் விடுதலை முன்னணியின் முன்னணி பொறுப்பாளர்கள்
இரா.விஜயபாலு,
பச்சைமால், இளந்தமிழன்.
வீரச்செல்வன், முத்து,
சிவக்குமார், முத்தைய்யன்,
பிரபாகரன் மற்றும்
திமுக தொழிற்சங்கத்தின் நிர்வாகி வள்ளுவன், சிஐடியு மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் கண்ணன், பொதுச் செயலாளர் ராதாகிருஷ்ணன், இந்து மஸ்த்தூர் சங்கத்தின் மாநில தலைவர் சுப்பிரமணி, ஏ.ஐ.சி.சி.டி.யு மாநில தலைவர் மதியழகன் உட்பட 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் ஒன்றிய மோடி அரசின் தொழிலாளர் விரோத கார்ப்பரேட் ஆதரவு தொழிலாளர் சட்டத் தொகுப்பு அமலாக்கத்தை தடுத்து நிறுத்தவும்,
பொதுமக்களின் சொத்துக்களை அதானி, அம்பானிகளுக்கு தாரை வார்ப்பதை தடுத்திடவும்,
பாசிச,பா.ஜ.க. மதவெறி கும்பலை விரட்டி அடிக்கவும், தொழிலாளர்கள் – விவசாயிகளை ஓரணியில் திரட்டவும், தமிழ்நாட்டிற்கு தரவேண்டிய நிதியை தராமலும், ஒன்றிய பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிப்பு செய்யப்பட்டுள்ளதை கண்டித்தும் நடைபெற உள்ள வேலை நிறுத்தம் தொடர்பான ஆலோசனை நடைபெற்றது.