
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோவில் 108 வைணவ தளங்களில் முதன்மை தலமாக விளங்குகின்றது.
இங்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வெளி மாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் சுவாமி தரிசனத்திற்காக வருகிறார்கள். வைகுண்ட ஏகாதசி, சித்திரை தேர், தை கருடன் மாசி கருடன் ஆகியவை ஸ்ரீரங்கம் கோவிலின் பிரசித்தி பெற்ற திருவிழாக்கள் ஆகும்.
இந்த திருக்கோவிலின் இணை ஆணையராக மாரியப்பன் என்பவர் பணியில் இருந்தார்.

அவர் இடமாற்றம் செய்யப்பட்டு அவருக்கு பதிலாக ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோவிலில் இணை ஆணையர் சிவராம் குமார்

ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி திருக்கோவிலுக்கு இணை ஆணையராக நியமனம் செய்யப்படுவதாக இந்து அறநிலையத்துறை அறிவித்துள்ளது.

புதிய இணை ஆணையருக்கு நியூ திருச்சி டைம்ஸ் தன் நெஞ்சார்ந்த வரவேற்பையும் வாழ்த்துக்களையும் பகிர்ந்து கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றது.