
பொன்மலை தெற்கு ரயில்வே எம்ப்ளாய்ஸ் சங் (SRES-NFIR) சார்பாக (அகில இந்திய எதிர்ப்பு வாரம் கண்டண ஆர்ப்பாட்டம்) பொன்மலை மத்திய பணிமனை ஆர்மரிகேட் பகுதியில் 21.03.25 காலை 6 -15 மணி முதல் 6-45 மணி வரை நடந்தது.
எஸ்.ஆர்.இ.சங் (SRES) உதவி கோட்ட செயலாளர் என்.ராமசாமி தலைமையில்,
உதவி பொது செயலாளர் எஸ்.இரகுபதி கண்டண முழக்க பேரூரையாற்றினார்.

போராட்ட கோரிக்கைகள்
- UPS-ல் உள்ள குறைகளை, பாதகங்களை கலைந்து OPS ஐ அமுல்படுத்திட!
- ஜனவரி 2020 முதல் ஜூன் 2021 வரை முடக்கப்பட்ட 18 மாத DA/DR ஐ வழங்கிட !
- லாபகரமாக இயங்கும் இரயில்வேயில் தனியார்மயத்தை தடுத்திட !
- PLB போனஸ் சீலிங்கை ரத்து செய்து சம்பளத்திற்கேற்ப போனஸ் வழங்கிட !
- GP 4600க்கு பதிலாக GP 4800 (L8) மற்றும் இரயில்வேயில் உள்ள அனைத்து கேட்டகிரி
6.
சூப்பர்வைசர்களுக்கும் GP 5400 (L9) வழங்கிட!
- டெக்னீசியன் GR.II (L4) ஐ டெக்னீசியன் GR.I (L5) வுடன் மெர்ஜர் செய்திட!
- 8வது ஊதிய குழுவின் பலன்களை 01-01-2026 முதல் அமுல்படுத்திட!
- CRC கமிட்டியை தூரிதப்படுத்தி 01-11-2023 முதல் அப்கிரடேசன் வழங்கிட !
- IRT/IDT க்கு பதிவு செய்து NOC வந்தவர்களுக்கு டிரன்ஸ்பர் உத்தரவு வழங்கிட !
- CCAA ஆக்ட் அப்ரென்டீஸ்களுக்கு வயது வரம்பை தளர்த்தி வேலை வழங்கிட !
- பணியில் உள்ளவர்களின் விருப்பப்படி PASS/PTO மேனுவலாக வழங்கிட!
- பணிமனை தொழிலாளர்களுக்கு Risk & Hardship அலவன்ஸ் வழங்கிட !
- பயோமெட்ரிக் பஞ்சை அனைத்து பணிமனைகளிலும் ICF போன்று அமுல்படுத்திட !
- 22-12-2003க்கு முன்பு இருந்த வேகன்சி அடிப்படையில் 01-01-2004க்கு பிறகு வேலைக்கு சேர்ந்த அனைவருக்கும் NPS லிருந்து OPS க்கு மாறுவதற்கான உத்தரவை அமுல்படுத்திட!
- டீசல் ஷாப் GOC தொழிலாளர்களுக்கு இன்சென்டிவ் அமுல்படுத்திட!
- பவர்ஹவுஸ் GOC தொழிலாளர்களுக்கு NH அலவன்ஸை வழங்கிட !
போன்ற கோரிக்கையை வழியுறுத்தி கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்ததார்கள்.

ஆர்ப்பாட்டத்தில் எஸ்.ஆர்.இ.சங் (SRES) பணிமனை கோட்ட நிர்வாகிகள் எஸ்.பாலமுருகன், முகமது கோரி, ஞானசேகர், மதன்குமார், சாம்சன், என்.சி.ராஜேந்திரன், கென்னடி, வெங்கட்நாராயணன், செந்தில்குமார், ஜோசப் சேகர் மற்றும் பலர் கலந்துக் கொண்டார்கள்.