

டீக்கடை மாஸ்டரை கட்டையால் அடித்துக் கொலை செய்த நம்பருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூபாய் ஆயிரம் அபராதம் விதித்து திருச்சி மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதித்துறை நடுவர் அவர்களால் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 28.9.2022 ஆம் தேதி அரசு மருத்துவமனை காவல் நிலைய பகுதியில் உள்ள ஹோட்டலில் உணவு சரியாக பரிமாறவில்லை எனக் கூறி டீக்கடை மாஸ்டரை கட்டையால் தாக்கி கொலை செய்யப்பட்டதாக பெறப்பட்ட புகாரின் பேரில் வழக்க பதிவு செய்யப்பட்டு வழக்கில் எதிரியான தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த அழகேசன் என்ற குமார் வயது 40 தந்தை பெயர் மாரி என்பவரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வழக்கின் புலன் விசாரணை விரைந்து முடிக்கப்பட்டு கடந்த 21.12.2022-ம் தேதி மேற்படி எதிரி குமார் என்ற அழகேசன் மீது குற்ற பத்திரிக்கையை புலன் விசாரணை அதிகாரி நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்கள். மேற்படி வழக்கில் மாண்புமிகு திருச்சி மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி அவர்களால் மேற்படி எதிரி அழகேசன் என்ற குமார் என்பவருக்கு 32 இ.த.ச பிரிவின்படி ஆயுள் தண்டனையும் ரூபாய் ஆயிரம் அபராதமும் விதித்து அபராதம் கட்ட தவறினால் மேலும் ஆறு மாத காலம் சிறை தண்டனை என தீர்ப்பு வழங்கப்பட்டது.
இவ்வழக்கில் சிறப்பாக புலன் விசாரணை செய்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து நீதிமன்ற விசாரணைக்கு சாட்சியங்கள் குறித்த காலத்தில் ஆஜர்படுத்திய அரசு மருத்துவமனை காவல் நிலைய காவல் ஆய்வாளர், காவல் ஆளினர்கள் மற்றும் நீதிமன்றப் பணிபுரிந்த காவல் ஆளிநர்களையும் திருச்சி மாநகர காவல் ஆணையர் திருமதி.ந.காமினி இ.கா.ப அவர்கள் வெகுவாகப் பாராட்டினார்கள்.