

23/03/25
திருச்சி
திராவிட முன்னேற்றக்கழகத் தலைவர் தமிழ்நாடு முதல்வர்
மு.க.ஸ்டாலின் அவர்களின் 72வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் திருச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் திருவெறும்பூர் பேருந்து நிலையம் அருகில் கிழக்கு மாநகர திருவெறும்பூர் பகுதி திமுக சார்பில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு திருவெறும்பூர் பகுதி கழகச் செயலாளர்
S சிவக்குமார் தலைமை தாங்கினார். 40 வது வட்டக் கழக செயலாளர்
சோம.குணாநிதி வரவேற்புரை ஆற்றினார்.
கூட்டத்தில் திராவிட கழக பேச்சாளர் எழுத்தாளர் வே.மதிமாறன்
மாநகரக் கழகச் செயலாளர் மு மதிவாணன்
தலைமை செயற்குழு உறுப்பினர் சேகரன்.

ஆகியோர் பங்கேற்று திராவிட முன்னேற்றக்கழக அரசின் சாதனைகளையும் தமிழ்நாடு முதலமச்சர்
மு.க.ஸ்டாலின் ஒன்றிய அரசிடம் நமது உரிமைகளுக்காக போராடும் முறையை எடுத்துக் கூறி உரையாற்றினர்.

இக்கூட்டத்தில் மாவட்ட மாநகர பகுதி கழக நிர்வாகிகள் அ.த.த.செங்குட்டுவன், லீலாவேலு, செந்தில், நூற்கான், துணைமேயர் திவ்யா, தமிழ்ச்செல்வன், சந்திரமோகன்,
பொன்செல்லையா, சரோஜினி, பகுதி கழகச் செயலாளர்கள் நீலமேகம், தர்மராஜ், விஜயகுமார், மற்றும் அணிகளின் அமைப்பாளர்கள் துனை அமைப்பாளர்கள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இறுதியாக 40 வட்டக் கழகச் செயலாளர் அருண்குமார்
நன்றி கூறினார்.
