இன்று திருச்சியில் SDTU தொழிற்சங்கம் திருச்சி மாவட்டம் மற்றும் மீனா ஆட்டோ மெக் பஜாஜ் நிறுவனம்,ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா மற்றும் *மாவட்ட தொழில் வளர்ச்சி மையம்* ஆகியோர்கள் இணைந்து 13ஆட்டோ ஓட்டுனர்களுக்கு அரசு வழங்கும் மானியத்துடன் ஆட்டோக்கள் வழங்கும் நிகழ்ச்சியானது நடைபெற்றது
இதில் SDTU தொழிற்சங்கம் திருச்சி மாவட்ட தலைவர் முஸ்தபா அவர்கள் தலைமை ஏற்றார் உடன் மாவட்ட செயலாளர் சக்கரை மீரான், துணைத் தலைவர்கள் மீரான் மைதீன், காஜா மொய்தீன் ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர்.

இந்நிகழ்ச்சியில்மாவட்ட பொருளாளர் முகமது இலியாஸ் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். இந்நிகழ்விற்கு சிறப்பு அழைப்பாளராக SDTU தொழிற்சங்க மாநில பொதுச் செயலாளர் ரவுப் நிஸ்தார் அவர்கள் கலந்துக் கொண்டு 13 புதிய ஆட்டோக்களை மக்களின் பயன்பாட்டிற்காக கொடி அசைத்து துவக்கி வைத்தார் .

மேலும் இந்நிகழ்வில் SDTU தொழிற்சங்க மாநிலச் செயலாளர் K.முகம்மது ரபீக், SDPI கட்சியின் மாநில செயலாளர் இமாம்.Rஹஸ்ஸான் பைஜி.MBA.,LLB.,SDTU ஈரோடு மாவட்ட செயலாளர் தஸ்தகீர் , SDPI கட்சி திருச்சி தெற்கு மாவட்ட தலைவர் K.தமிம் அன்சாரி, மாவட்ட துணைத் தலைவர் தளபதி அப்பாஸ் ஆகியோர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.இந்நிகழ்ச்சியை ஊடகப் பொறுப்பாளர் அல்லாபகஸ் அவர்கள் தொகுத்து வழங்கினார்.இந்நிகழ்வில் தொழிற்சங்கத்தின் மாவட்ட இணைச் செயலாளர் தமீமுல் அன்சாரி,அப்துல் சையது, உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.புதிதாக ஆட்டோக்களை பெற்ற 13 நபர்களும் SDTU தொழிற்சங்க நிர்வாகத்தினருக்கு வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்துக் கொண்டனர்.இறுதியாக மாவட்ட செயற்குழு உறுப்பினர் தர்கா. அப்பாஸ் அலி அவர்கள் நன்றி உரையாற்றினார்.
நியூ திருச்சி டைம்ஸ் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய https://chat.whatsapp.com/HECU1DujoI2A4Xa07hehlv