
காங்கேயம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420
திருப்பூரில் தனியார் கல்லூரி கலைத் திருவிழா கோலாகலம்- ஆண்ட்ரியா பாடல் பாடி ஆடியதில் மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் உற்சாகம்…
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே தனியார் கல்லூரியில் எலன்ட்ரா 2025 என்னும் விழா விமர்சையாக நடைபெற்றது. நிகழ்வில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
பின்னர் நடைபெற்ற கலை நிகழ்ச்சியில் பிரபல திரைப்பட நட்சத்திரங்கள், சின்னத்திரை நட்சத்திரங்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் நடிகையும் பிரபல பாடகர்மான ஆன்ட்ரியா கலந்து கொண்டு பாடல் பாடி நடனம் ஆடியது அனைவரையும் உற்சாகமடைய செய்தது.
மேலும் மாணவர்கள் மத்தியில் பேசிய நடிகர் ஹரிஷ் கல்யாண் காங்கேயம் காளைகள் உலகின் புகழ்பெற்ற காளைகள் எனவும், தேங்காய் எண்ணெய்க்கு புகழ்பெற்றது காங்கேயம் என விவசாயிகள் சிறப்பு குறித்து பற்றி பேசினார்.
இந்நிகழ்ச்சியில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
