
நியூ திருச்சி டைம்ஸ் செய்தி எதிரொலி திருப்பராய்த்துறை சமத்துவ சுடுகாட்டிற்கு செல்வதற்கான பாதை சரி செய்யப்படுகிறது
30/10/24 அன்று ” சுடுகாட்டிற்கு செல்வதற்கான பாதை சரி செய்து தரப்படுமா” என்ற தலைப்பில் நமது நியூ திருச்சி டைம்ஸ் பதிப்பில் புதன்கிழமை அன்று செய்தி வெளியிட்டு இருந்தோம்.
அதன் எதிரொலியாக உடனடியாக திருப்பராய்த்துறை சமத்துவ சுடுகாட்டிற்கு செல்வதற்கான பாதையை மறைத்து விழுந்திருந்த மரங்கள் வெட்டப்பட்டு அவைகள் ஒரு ஓரமாக குவிக்கப்பட்டு பாதை சரி செய்யப்பட்டு வருகிறது.
திருப்பராய்த்துறை கிராம பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் செய்தி வெளியிட்ட “நியூ திருச்சி டைம்ஸ்க்கு” நன்றிகளை தெரிவித்தனர்