குளங்களில் உள்ள வண்டல் மண்ணை எந்தவித கட்டுப்பாடும் இன்றி எளிமையாக விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள கோரிக்கை விடுத்து மாவட்ட ஆட்சியருக்கு தமிழ் மாநில காங்கிரஸின் விவசாய பிரிவு கோரிக்கை

இன்று திருச்சிராப்பள்ளியில் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில் விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்றது இந்த கூட்டத்திற்கு தமிழ் மாநில காங்கிரஸ் கமிட்டியின் விவசாய பிரிவு சேர்ந்த நிர்வாகிகள் திருச்சி மத்திய மாவட்ட தலைவர் கே டி தனபால் மண்டல துணைத் தலைவர் ராஜேந்திரன் புங்கனூர் சத்யம் புங்கனூர் சின்னத்தம்பி அருவாக்குடி நடராஜன் அருவாக்குடி மாரிமுத்து உட்பட முக்கிய நிர்வாகிகள் நேரடியாக வந்திருந்த மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களிடம் தங்கள் கோரிக்கை மனுவை அழித்தனர் அதில் அவர்கள் குறிப்பிட்டிருந்தது விவசாயிகளின் சாகுபடி நிலங்களை வளப்படுத்த ஏரிகளில் வண்டல் மண் எடுப்பது தொடர்பாக கோரிக்கை மனு அளித்திருந்தனர் அதில் விவசாயிகள் தங்கள் நிலங்களை வளப்படுத்த கால்நடைகளின் கழிவுகள் விவசாய நிலங்களில் சேர்த்து செழிப்பாக விவசாயம் செய்வதாகவும் தற்பொழுது கால்நடைகளின் எண்ணிக்கை பெரும் அளவில் குறைந்துவிட்ட காரணத்தினால் நாட்டு மாடுகள் பெருவாயாக விவசாயிகளிடம் தற்பொழுது இல்லை வேளாண் கருவிகள் பயன்பட்டாலும் இடவசதி இன்மை காரணமாகவும் கால்நடை வளர்ப்பு குறைந்துவிட்டது எனவும் தற்பொழுது செயற்கை உரத்திற்கு மாற்றாக விவசாய நிலங்களை வளப்படுத்த வண்டல் மண்ணை நம்பி விவசாயிகளின் நிலை உள்ளதாகவும் தங்கள் மணிகண்டம் ஒன்றியத்தில் உள்ள நீர்வளத் துறைக்கு சொந்தமான அனைத்து குளங்களிலும் விவசாயிகளின் தேவைக்கு ஏற்ப போதுமான வண்டல் மண் எந்தவித கட்டுப்பாடும் இன்றி எளிமையாக அந்தந்த பகுதி விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ள தடையில்லா சான்று வழங்கப்படுகிறது மேலும் விவசாயிகளுக்கு டிராக்டரில் மட்டும் வண்டல் மண் எடுத்து செல்ல அனுமதி உள்ள நிலையில் மேலும் அதிகப்படியான வண்டல் மண் எடுத்து செல்ல இயலவில்லை என்றும் செலவினங்கள் மற்றும் ஆட்கள் பணி அதிகமாகதாலும் விவசாயிகளின் இயலாத ஏழ்மை நிலையை கருத்தில் கொண்டு டிப்பர் லாரிகளில் எடுத்துச் செல்ல அனுமதி வழங்க வேண்டும் என்றும் தங்களை தாழ்மையோடு வேண்டுவதாக அவர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    என் சி சி பி ஏ (NCCPA) சார்பாக மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டமானது திருச்சியில் நடைபெற்றது

    இன்று திருச்சிராப்பள்ளி தலைமை அஞ்சலகம் முன்பாக மத்திய அரசனை கண்டித்து நேஷனல் குவார்டினேஷன் கமிட்டி ஆப் பென்ஷன் அஸ் அசோசியேசன் ( NCCPA)மற்றும், (AIPRPA)ஏ ஐ பி ஆர் பி ஏ , (AIBDPA)ஏ ஐ பி டி பி ஏ,…

    வக்பு வாரிய சட்ட திருத்தத்திற்கு எதிராக எஸ்டிபிஐ கட்சியினர் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

    வக்பு வாரிய சட்டத்தை கண்டித்து இந்தியா முழுவதும் பல்வேறு இஸ்லாமிய அமைப்பினர் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக திருச்சி பாலக்கரை ரவுண்டானா பகுதியில் எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் மத்திய அரசு கண்டித்து வக்பு வாரிய சட்டத்தை திரும்ப…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *