
54 வயதான பெரம்பலூரைச் சேர்ந்த மின்வாரிய பணியாளர் கடந்த நான்கு வருடங்களாக வயிற்றில் ஓர் அரிய வகை புற்றுநோயால் அவதிப்பட்டிருந்தார் நான்கு வருடங்களில் சென்னை முதல் பல ஊர்களில் மருத்துவம் பார்த்தும் கட்டி அதிகமாகி கொண்டு வயிறு வீக்கம் மற்றும் வயிற்று வயிற்று வலியினாலும் மிகவும் அவதிப்பட்டு கொண்டிருந்தார் இந்நிலையில் சில்வர் லைன் மருத்துவமனைக்கு வந்த அவரை எங்கள் மருத்துவ குழு முழு பரிசோதனைகளை மேற்கொண்டு அரிய வகை மருத்துவ சிகிச்சை மேற்கொள்ள தீர்மானித்தனர் . அதன்படி கிட்டத்தட்ட 20 மணி நேரம் அறுவை சிகிச்சையில் ஈடுபட்டு 23 கிலோ எடையுள்ள கட்டிகளை வயிற்றிலிருந்து எங்களுடைய திறம் வாய்ந்த மருத்துவ குழு அறுவை சிகிச்சை மேற்கொண்டது இதில் வயிற்றில் கட்டி பரவி உள்ள பகுதிகளில் ( குடல் வால், குடல் ஒரு பகுதி மண்ணீரல் பெரிடோனியம் எனப்படும் உள்ளுறை ) அனைத்தும் அகற்றப்பட்டு அதில் வெப்பத்தினால் ஆன (HIPEC) ஹச் ஐ பி சி எனப்படும் கீமோதெரபி செலுத்தப்பட்டது. அறுவை சிகிச்சை மட்டுமல்லாமல் அதன் பிறகு நீண்ட நாட்கள் செயற்கை சுவாசம் மற்றும் தீவிர சிகிச்சை பிரிவில் எங்களின் மருத்துவ குழுவினரால் சிகிச்சை அளிக்கப்பட்டு இப்பொழுது பூரணம் குணமடைந்து மீண்டும் பணி திரும்பினார் என்பதை மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம் . இதுமட்டுமல்லாது முற்றிய நிலையில் உள்ள பல வகையான சவாலான புற்றுநோய்களுக்கும் அறுவை சிகிச்சைகளுக்கும் மேற்கொண்டு நோயாளிகளை குணப்படுத்தி மகிழ்ச்சியுடன் வாழ வைத்து சிறந்து விளங்குகிறது சில்வர் லைன் சிறப்பு மருத்துவமனை. அறுவை சிகிச்சையில் ஈடுபட்ட மருத்துவர்களின் 1.பெயர் டாக்டர் .ஜி செந்தில்குமார். 2. டாக்டர் எஸ். சிவபிரகாஷ் 3. டாக்டர் கே. நரேந்திரன் 4.டாக்டர் சங்கர்சுப்ரமணியன். 5.டாக்டர் பி. ராமமூர்த்தி
