
திருச்சி திருவானைக்காவல் அய்யன் தெரு பகுதியில் நேற்று மாலை முதல் தெரு விளக்குகள் எரியவில்லை.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மத்தாப்பு வெளிச்சம் இருக்கும் பொழுது தெரு விளக்குகள் எதற்காக என்று மாநகராட்சி அதிகாரிகள் முடிவு செய்து விட்டார்களோ என்னவோ!
நேற்று மாலை முதலே அந்த தெருவில் தெரு விளக்குகள் எரியவும் இல்லை அதிகாரிகள் புகார் அளிக்கப்பட்டும் நடவடிக்கை எடுக்கவும் இல்லை..
மின்சாரத்தை இப்படியும் சேமிக்கலாமோ என்று தெருவாசிகள் அதிசயித்து நிற்கின்றனர்.
மின்வாரிய அதிகாரிகளை நாம் தொடர்பு கொண்டு கேட்ட பொழுது அவர்கள் கூறியதாவது……
மின்சார சப்ளை இல்லை என்றால் உடனடியாக நாங்கள் அதை சரி செய்து தந்து விடுகின்றோம் ஆனால் இந்தப் பிரச்சனை மாநகராட்சி சம்பந்தப்பட்டது என்பதால் நீங்கள் மாநகராட்சி அதிகாரிகளையோ அல்லது அந்த பகுதியில் கவுன்சிலரையோ அணுகினால் தான் இந்த பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும் என்று கூறுகிறார்கள் அவர்களின் கூற்று நியாயமான ஒன்றுதானே.
விடியும் முன் விளக்கு வெளிச்சம் தருவீர்களா? மாநகராட்சி அதிகாரிகளே என பொதுமக்கள் கேட்கின்றனர்.