
திருச்சி மாநகரம் ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வருபவர் தமிழரசன் இவர் நேற்று இரவு பனியின் பொழுது மது போதையில் இருந்துள்ளார். அதேபோல இதே காவல் நிலையத்தில் பணியாற்றும் மணிகண்டன் என்ற காவலர் பணிக்கு வராமல் மெத்தனமாக இருந்துள்ளார்.
இது குறித்த தகவலின் பெயரில் விசாரணை நடத்திய திருச்சி சிட்டி கமிஷனர் காமினி ஐபிஎஸ் மதுபோதையில் பணியாற்றிய தமிழரசன் பணியில் மெத்தனமாக இருந்த மணிகண்டன் ஆகிய இருவரையும் பணி இடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
சிறப்பு உதவி ஆய்வாளரும் காவலரும் சஸ்பெண்ட் செய்யப்பட்ட சம்பவம் திருச்சி காவலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.