
நியூ திருச்சி டைம்ஸ் செய்தி எதிரொலி திருப்பராய்த்துறையில் மக்களை துன்புறுத்தி வந்த குரங்கு வனத்துறையினரால் பிடிக்கப்பட்டது.
28/10/24 அன்று ”கடிக்க வரும் குரங்கிடமிருந்து காப்பாற்ற மக்கள் கோரிக்கை” என்ற தலைப்பில் நமது நியூ திருச்சி டைம்ஸ் பதிப்பில் செய்தி வெளியிட்டு இருந்தோம்.
அதன் எதிரொலியாக இன்று 05/11/2024 வனத்துறையினர் வந்து அந்த குரங்கை பிடித்து சென்றனர். நடவடிக்கை எடுத்த வனத்துறை அதிகாரி திரு கோபிநாத், வன காவலர் திரு பாலசுப்பிரமணியம் மற்றும் இன்று கூண்டு வண்டியுடன் வந்த வனத்துறையினர் பிரிட்டோ மற்றும் குழுவினர்க்கும் திருப்பராய்த்துறை கிராம பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.
திருப்பராய்த்துறை கிராம பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் செய்தி வெளியிட்ட “நியூ திருச்சி டைம்ஸ்க்கு” நன்றிகளை தெரிவித்தனர்.
