

திருச்சி அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை சார்பில் மத்து குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி திருச்சியில் நடைபெற்றது அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் பேசுகையில்,
இரண்டு விதமான மத்து மக்களோட வாழ்வியலில் இருக்கிறது. ஒன்னு சாம்பாருக்காக பருப்பு கடைவதற்கு பயன்படுகிறது. இண்டாவது தயிர் கடைஞ்சு அதிலிருந்து வெண்ணெயை பிரித்தெடுக்க பயன்படுகிறது.
தயிரை கடைந்து வெண்ணெய் பெறுவதற்காக பயன்படுத்தும் மத்துவகைகளில் இரண்டு உள்ளது.
சுவரை ஒட்டி ஒரு சிறிய கொம்பு நட்டிருப்பார்கள் அல்லது வீட்டிலுள்ள மரத்தூண்களில், ஒரு கயிறு கட்டி இருக்கும், தயிர் கடைய “மத்து” இருக்கும். அந்த மத்தின் மையப் பகுதியில் கயிறு சுற்றுவதற்கு ஏற்றவாறு வடிவமைப்பு இருக்கும், நின்றுகொண்டே கடைவதற்கு ஏற்றவாறு 5, 6 அடி நீளமுள்ளதாக இருக்கும். அதிக அளவு தயிரினை கடைவது இம்முறையில். மற்றொன்று உட்கார்ந்து கொண்டு கடைவது போல சிறிய அளவில் இருக்கும். இது குறைவான அளவு தயிரை கடைவதற்கு பயன்படும் என்றார்.திருச்சி பிஷப் ஹீபர் தன்னாட்சிக் கல்லூரி வரலாற்று துறை முதுகலை மாணவர்கள் அபிஷேக், அனு பிரியா, அரிஸ்டோ வசந்தகுமார், திவாகரன், கிஷோர் குமார், கிஷோர், சஞ்ஜய்குமார், லோகேஷ்வரன், உதயகுமார், நரேஷ் பாபு, சித்தார்த் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.