
சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் புற்றுநோய் சிறப்பு மருத்துவர் டாக்டர் பாலாஜி என்பவர், நோயாளியின் உறவினர் ஒருவரால் கொலைவெறித் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளதாகவும், தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. பட்டப்பகலில் நூற்றுக்கணக்கானோர் வந்து செல்லும் மருத்துவமனையில் நடந்த இந்த சம்பவம் கண்டிக்கத்தக்கது.
இந்த சம்பவம் அரசு மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆகவே, அரசு மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு உரிய பாதுகாப்பை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். மருத்துவர் பாலாஜி அவர்கள் விரைந்து நலம் பெற பிரார்த்திக்கிறேன்.
நானும் மருத்துவத்துறையை சேர்ந்தவனே. மருத்துவர்கள் செவிலியர்களின் வலிகளை நன்கறிவேன். கொரோனா காலகட்டத்தில் மற்ற உயிர்களைக்காப்பாற்ற தன் இன்னுயிரை ஈந்த மருத்துவர்களையும் செவிலியர்களையும் நீங்கள் அறிவீர்களா? எப்படி உயிரைக்காக்கும் மருத்துவனை தாக்க மனம் வருகிறது.
புற்றுநோய் மருத்துவ சிகிச்சையில் கீமோ சிகிச்சை என்பது வலி நிறைந்த ஒன்று. நோயாளி அந்த வலியை தாங்கியே ஆக வேண்டும். புற்றுநோயிலிருந்து மீண்டவர்களிடம் கேட்டுப்பாருங்கள் அந்த வலியையும் வேதனையையும். அதற்கு மருத்துவரும் செவிலியரும் எப்படி காரணமாக முடியும்?
மருத்துவன் இறைவனுக்கு நிகரானவன். அவனைக்கொல்ல நினைக்கும் எவருக்குமே வாழும் காலத்திலேயே நரகம் நிச்சயம்.
மருத்துவர்களும் நம்மைப்போன்ற மனிதர்களே அவர்களுக்கும் உணர்வுகள் உண்டு உறவுகள் உண்டு.
அரசு மருத்துவர்களின் பாதுகாப்பில் அதிக கவனம் கொண்டு மருத்துவர்களை தாக்கும் எவருக்கும் கடுமையான தண்டனைகளை தர வேண்டும்.
நேற்று திருச்சியில் பத்து கயவர்களால் அரசு மருத்துவமனையில் மருத்துவர் கொலைவெறியோடு தாக்கப்பட்ட காயம் ஆறுவதற்குள் இன்று சென்னையில்.
தமிழக அரசே மக்கள் நலனில் அக்கறை கொண்டு செயல்படும் முதல்வர் அவர்களே மருத்துவர்களின் நலனிலும் அக்கறை கொள்ளுங்கள்.
நன்றி
ஜெய்ஹிந்த்
ஷங்கர்ராமன்
ஊடகவியலாளர்
நியூ திருச்சி டைம்ஸ்