

கடந்த சில நாட்களுக்கு முன்பு திருப்பராய்த்துறை ஊராட்சி இடுகாட்டு பகுதிக்கு செல்லும் வழியில் ஆலமரம் கீழே விழுந்தது மேற்படி அந்த மரத்தை அகற்றி தருமாறு கிராம மக்கள் கேட்டுக்கொண்டதன் பெயரில் கோவில் நிர்வாகம் அந்த மரத்தை அகற்றி கொடுத்தது.

ஆனாலும் சரியாக மரத்தை வெட்டாமல் விட்டு விட்டு சென்ற காரணத்தினால் அது மக்களுக்கு நடப்பதற்கு இடையூறாக இருந்து வருகிறது.

மேற்படி அந்த மரம் விழுந்ததில் இடுகாட்டிற்கு அருகில் இருக்கும் காத்திருப்போர் கூடம் இடிந்து கீழே விழும் நிலையில் உள்ளது.
அதனை திருப்பராய்த்துறை ஊராட்சி நிர்வாகம் உடனடியாக சரி செய்து கொடுக்கும்படி கிராம மக்கள் கோரிக்கை.
