
இன்று திருப்பராய்த்துறையில் இடுகாடு செல்லும் பாதையில் சாய்ந்த ஆலமரத்தின் பாகங்கள் அகற்றப்படாமலும் காத்திருப்போர் மண்டபம் இடியும் அபாயத்தில் உள்ளதாகவும் செய்தி வெளியிட்டிருந்தோம்.

மாலையில் நம் அலுவலகத்தை தொடர்பு கொண்ட ஊராட்சி மன்றத்தலைவர் திரு.பிரகாசமூர்த்தி அந்த தகவல் தவறானதென்றும் மண்டபம் நல்ல நிலையில் உள்ளதாகவும் விளக்கமளித்து அது தொடர்பான படங்களையும் பகிர்ந்தார்.

அதன் விபரம் கீழே……..
இடிந்து விழும் நிலையில் காத்திருப்போர் கூடம் உள்ளதாக வந்த தகவல் தவறானது. பெரிய மரக்கிளை முறிந்து விழுந்ததில் ஒரு ஓரத்தில் சேதமடைந்தது உண்மை. ஆனால் கட்டிடம் பெரியளவில் சேதமடையவில்லை. யாருக்கும் பாதிப்பு ஏற்படுத்தும் வகையிலும் இல்லை என்பதை தங்கள் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன்.
TNB.பிரகாசமூர்த்தி
ஊராட்சி மன்ற தலைவர்
திருப்பராய்த்துறை

மக்களின் வாழ்வியல் பிரச்சனைகளுக்கு உரிய தீர்வு பெறுவதற்காக சம்மந்தப்பட்ட துறை/அதிகாரிகளை நாடி அவற்றை தீர்த்து வைப்பதே ஊடக தர்மம். அதனடிப்படையில் வெளியிடப்பட்ட செய்திக்கு உரிய விளக்கம் கிடைத்துள்ளதால் மேற்கண்ட செய்தியை நாம் விளக்கிக்கொள்ள கடமைப்பட்டுள்ளோம்.
என்றென்றும் சாமானிய மக்களின் மனசாட்சியாக உண்மை நிகழ்வுகளை மக்கள்மன்றத்தில் சமர்பிப்பதே நமது நியூ திருச்சி டைம்ஸ் ன் உயரிய நோக்கமாகும்.