

234/234
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் கொளத்தூர் தொகுதியில் 234/77 ஆய்வுத் திட்டத்தின் கீழ் 234ஆவது தொகுதியாக ஆய்வு மேற்கொண்டார் அமைச்சர் திரு.அன்பில் மகேஸ் பொய்யாமொழி.

கொளத்தூர் தொகுதி ஜி.கே.எம் காலனி பகுதியில் அமைந்துள்ள அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில்
குழந்தைகள் தினமான இன்று விரிவான ஆய்வு மேற்கொண்டு மாணவர்கள் மற்றும் ஆசிரியப் பெருமக்களின் கோரிக்கைகளையும் கேட்டறிந்தார். AI தொழில்நுட்பத்தின் உதவியுடன் ரோபோடிக்ஸ் கருவிகளை தயாரித்துள்ள மாணவர்களை சந்தித்து வாழ்த்துகள் தெரிவித்தார். தொடர்ந்து முதலமைச்சரின் காலை உணவை மாணவர்களுக்கு பரிமாறி, பள்ளியின் உட்கட்டமைப்பு குறித்து விரிவான ஆய்வு மேற்கொண்டார். பள்ளியின் கழிப்பறை வசதிகளை பார்வையிட்டு ஆசிரிய பெருமக்களின் கோரிக்கைகளையும் கேட்டறிந்தார்.

இந்நிகழ்வில் மாண்புமிகு அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு அவர்களும், வணக்கத்திற்குரிய மேயர் திரு.பிரியாராஜன் அவர்களும் கலந்துகொண்டார்கள்.
தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளுக்கும் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி நேரடியாக சென்று பள்ளி கல்வித்துறை சார்ந்த ஆய்வுகளை மேற்கொண்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
