

முன்னாள் பாரதப் பிரதமர் பாரத ரத்னா பண்டிட் ஜவஹர்லால் நேரு அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு திருச்சியில் உள்ள அவரது திரு உருவ சிலைக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச் செயலாளர் வழக்குரைஞர் எம் சரவணன் தலைமையில் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்யப்பட்டு பள்ளி குழந்தைகளுக்கு நோட்டு புத்தகம் பேனா பென்சில் இனிப்புகள் வழங்கினார்.

பள்ளி குழந்தைகள் பண்டித ஜவகர்லால் நேரு அவர்களின் பிறந்த தினத்தை குழந்தைகள் தினமாக கொண்டாடுவது குறித்தும் அவரைக் குறித்தும் குழந்தைகள் பேசினர் இதில் வெற்றி பெற்றவருக்கு பரிசுகளை வழக்குரைஞர் எம் சரவணன் வழங்கினார்.
இந்நிகழ்வில் சிறுபான்மை பிரிவு பஜார் மைதீன் உறையூர் விஜி கலை பிரிவு ராஜீவ் காந்தி மேலபுதூர் சத்தியநாதன் சமீரா பேகம் என் ஜி ஓ பிரிவு தலைவர் திருக் கண்ணன் திம்மை செந்தில் குமார் நிர்மல் குமார் கோகுல் கிருஷ்ணமூர்த்தி தாகூர்தெரு முருகன் அன்பு ஆறுமுகம் அண்ணாதுரை சம்பத் வழக்குரைஞர் பிரிவு விக்னேஷ் சிவகாமி சுகன்யா இளைஞர் காங்கிரஸ் கம்பை பரத் ஜிம் விக்கி உறையூர் காமில் இஸ்லாம் இக்பால் இர்பான் ரகு சிந்தை ஸ்ரீராம் பிரகாஷ் பாலாஜி முகமது சலீம் மாரியப்பன் சண்முகம் மற்றும் ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
