
பகுதிநேர ஆசிரியர்கள்
பணிநிரந்தரம்
திமுக தேர்தல் வாக்குறுதி 181
முடிவு குறித்து
முதல்வர் ஸ்டாலின் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்:
பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் வலியுறுத்தல் :
100 நாளில் பணி நிரந்தரம் செய்வோம் என்ற திமுக தேர்தல் வாக்குறுதியை பகுதிநேர ஆசிரியர்கள் நம்பி இருந்தார்கள்.
ஆனால் 42 மாதங்கள் அதாவது மூன்றரை ஆண்டுகள் முடிந்த பின்னரும்
சொன்னபடி முதல்வர் ஸ்டாலின்
பணி நிரந்தரம் செய்ய வில்லை என்பதால்
பகுதிநேர ஆசிரியர்கள் தொடர்ந்து போராடி வருகிறார்கள்.
அதிமுக ஆட்சியில் கடைசியாக 2021 ஆம் ஆண்டு பிப்ரவரியில் 10 ஆயிரம் ரூபாய் சம்பளம் பெற்று வந்த பகுதிநேர ஆசிரியர்களுக்கு,
அப்போது திமுக ஆட்சிக்கு வந்தால் நிரந்தரம் செய்வோம் என
உங்கள் தொகுதி ஸ்டாலின் நிகழ்ச்சி மூலமாக நேரில்
பகுதிநேர ஆசிரியர்களிடம்
தருமபுரி, கன்னியாகுமரி, மயிலாடுதுறையில்
கலந்துரையாடிய ஸ்டாலின்
இந்த வாக்குறுதியை கொடுத்தார்.
உங்கள் தொகுதி ஸ்டாலின் கோரிக்கை அனைத்தும்
திமுக ஆட்சிக்கு வந்ததும்
100 நாளில் நிறைவேற்றப்படும் என
377 வது வாக்குறுதியாக திமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றது.
அதுபோல பிரதான கோரிக்கையாக 181வது வாக்குறுதியிலும்
பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றது.
ஆனாலும் முதல்வர் பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்வது குறித்து இதுவரை நேரடியாக பதில் சொல்லவில்லை என்பதால் கவலை அடைந்து வருகின்றார்கள்.
பள்ளிக்கல்வி அமைச்சர் இந்த 43 மாதங்களாக பேட்டியில் படிப்படியாக பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை நிறைவேற்றப்படும் என
திரும்ப திரும்ப
ஒரே மாதிரியாக
சொல்வதையும் யாரும் விரும்பவில்லை.
திமுக ஆட்சிக்கு வந்து பல போராட்டங்களுக்கு பின்னர்தான்,
முதல் முறையாக சம்பள உயர்வு 2,500 ரூபாய்,
இந்த ஆண்டு ஜனவரியில் வழங்கப்பட்டது.
ஆனாலும் இந்த 2,500 ரூபாய் சம்பள உயர்வை,
ஏற்கனவே அதிமுக ஆட்சியில் கிடைத்த 10 ஆயிரம் ரூபாய் சம்பளத்துடன் சேர்த்து,
மொத்தமாக 12,500 ரூபாயாக வழங்காமல்
தனித்தனியாக பட்டுவாடா
செய்வதால் கவலை அடைந்து வருகின்றார்கள்.
அதுபோல சம்பள உயர்வு அறிவிப்புஅன்று சொன்ன,
10 லட்சம் மருத்துவ காப்பீடு வழங்கப்படும் என்ற அறிவிப்பும்
ஒரு ஆண்டு முடிந்த பின்னரும்
அது குறித்த தகவலே இல்லை என்பதால் அதிருப்தி அடைந்து உள்ளனர்.
ஏற்கனவே மே மாதம் சம்பளம் ஒவ்வொரு ஆண்டும் கிடைக்காத நிலையில்,
பணி பாதுகாப்பு இல்லாத சூழலில் தவித்து வருகின்றனர்.
2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இடைக்கால பட்ஜெடை தொடர்ந்து, 2022, 2023, 2024 என மூன்று முழுமையான பட்ஜெட் என
இதுவரை மொத்தமாக 1,53,827 கோடிக்கு பள்ளிக்கல்வித்துறைக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதில் இருந்து 250 கோடி ஒதுக்கினால் காலமுறை சம்பளம் வழங்க முடியும்.
இது பெரிய விஷயம் இல்லை.
ஆனாலும் ஒரு பட்ஜெட்டிலும் பகுதிநேர ஆசிரியர்களுக்கு நிதி ஒதுக்காமல் புறக்கணிக்கப்படுகிறது.
தற்போதைய 12,500 ரூபாய் சம்பளம் வழங்க ஆண்டிற்கு 165 கோடி ஆகிறது.
இதை காலமுறை சம்பளமாக வழங்க 430 கோடி ஆகும்.
இதற்கு இதற்கு மேலும் 250 கோடி கூடுதலாக ஒதுக்கினால் போதும்.
இதை 12 ஆயிரம் குடும்பங்கள் வாழ்வாதாரம் மேம்பட செய்ய வேண்டும்.
13 ஆண்டுகளாக தற்காலிகமாக அரசுப் பள்ளி மாணவர்கள் நலனுக்காக கற்பித்து வருகின்ற 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்களை,
இனியும் தாமதம் செய்யாமல்
முதல்வர் ஸ்டாலின் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
இது திமுக தேர்தல் வாக்குறுதியில் உள்ளதால் இதை அரசாணையாக்க வேண்டும்.
எனவே அமைச்சரவையில் அரசு கொள்கை முடிவாக அறிவித்து
பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
—
S. செந்தில்குமார்
மாநில ஒருங்கிணைப்பாளர்
பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு,
செல் : 9487257203