

திருச்சி புத்தூர் கிளை நூலகம் வாசகர் வட்டம் 57வது தேசிய நூலக வார விழாவை முன்னிட்டு வட்ட சில்லுகள் குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சியினை நூலகத்தில் நடத்தியது. திருச்சி புத்தூர் கிளை நூலக வாசகர் வட்ட தலைவர் யோகா ஆசிரியர் விஜயகுமார் துவக்க உரையாற்றினார் நூலகப் பணியாளர் மீனாட்சி சுந்தரம், சங்க கால நாணயங்கள் சேகரிப்பாளர்கள் பாண்டியன் முகமது சுபேர் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். சுடுமண் பொருட்கள் சேகரிப்பாளர் சந்திரசேகரன் வட்ட சில்லுகள் குறித்து பேசுகையில், அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை சுடுமண் மட்கலனின் உடைந்த ஓடுகள் கொண்டு வட்டமாக தட்டையான வடிவில் காணப்படுவது வட்டசில்லுகள் என்பர். வட்டச் சில்லுகள் பல அகழாய்வுகளில் கிடைத்துள்ளன. அவற்றில் சில அலங்காரம் செய்த நிலையிலும் கிடைத்துள்ளது. வட்டசில்லுகள் அக்கால மக்களின் சில்லு விளையாட்டு ஆகும் பெரும்பாலும் மகளிர் மட்டுமே விளையாட்டாக கருதி விளையாடியுள்ளனர். வட்டச் சில்லுகள் குறித்து தொல்லியல் நூல்கள் தகவல்களை வழங்குகின்றன எனவே வரலாற்று துறை மாணவர்கள் வரலாற்றை அறிந்து கொள்ள பல நூல்களை கற்றறிய வேண்டும் என்றார். என்றார்.பிஷப் ஹீபர் தன்னாட்சிக் கல்லூரி வரலாற்று துறை முதுகலை மாணவர்கள் அரிஸ்டோ வசந்தகுமார், திவாகரன், கிஷோர், லோகேஷ்வரன், இசாக். கிஷோர் குமார் உட்பட பலர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
