
தஞ்சாவூர் மாவட்டம் புதிய பேருந்து நிலையத்தில்தஞ்சை மருத்துவக் கல்லூரி செல்வதற்காக நோயாளிகளும் பயணிகளும் மணிக்கணக்கில் காத்திருக்கின்ற நிலை உள்ளது.

காத்திருக்கும் பயணிகளுக்கு பேருந்து நிழற்குடையோ அமர்வதற்கான இருக்கைகளோ எதுவுமே கிடையாது.ஒரு மணி நேரம் ஆனாலும் கால் கடுக்க வெயிலிலும் மழையிலும் அவர்கள் காத்துக் கொண்டு நிற்கும் அவல நிலை தொடர்கின்றது. தஞ்சை மருத்துவக் கல்லூரிக்கு தஞ்சை மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும் ஏராளமான நோயாளிகள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகின்றனர். இந்த சூழ்நிலையில் அவர்களை பார்ப்பதற்காக வரும் உறவினர்களோ அல்லது சிகிச்சைக்காக வரும் நோயாளிகளோ புதிய பேருந்து நிலையத்திலிருந்து மருத்துவக் கல்லூரி செல்ல வேண்டும் என்றால் நீண்ட நேரம் வெயிலிலும் மழையிலும் காத்திருக்கத்தான் வேண்டும்.

புதிய பேருந்து நிலையத்திலிருந்து பழைய பேருந்து நிலையத்திற்கு நிமிடத்திற்கு ஒரு பேருந்து இருக்கும் சூழலில் மருத்துவக் கல்லூரி செல்வதற்கு எத்தனை மணிக்கு பேருந்து வரும் என்பது அவர்களுக்கும் தெரிவதில்லை அங்கு நிறுத்தப்பட்டிருக்கும் ஆட்டோ ஓட்டுநர்களுக்கும் தெரிவதில்லை. மொத்தத்திற்கு புதிய பேருந்து நிலையத்திலிருந்து இரண்டு பேருந்துகளை இயக்கப்படுவதாகவும் அதனால் சரியான நேரம் என்பது யாருக்கும் தெரியாது என்றும் கூறுகிறார்கள் அங்கு இருக்கும் ஆட்டோ ஓட்டுநர்கள்
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அவர்களும் மாநகராட்சி அதிகாரிகளும் போக்குவரத்து துறை அதிகாரிகளும் தஞ்சாவூர் சட்டமன்ற உறுப்பினரும் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து மருத்துவக் கல்லூரிக்கு கால் வலியுடன் செல்லக்கூடிய பொதுமக்களுக்கும் நோயாளிகளுக்கும் தகுந்த உதவிகளை வழங்க வேண்டும் என்பதே கால் வலியோடு காத்திருக்கும் பொது ஜனங்களின் கோரிக்கை ஆகும்.
